வாலிபர் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி
19 May 2026, 11:47 pm
<p><strong>வாலிபர் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி</strong></p><p>நாமக்கல், மே 19- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் பள்ளிபாளை யம் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி உற்சா கமாக நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் (தெற்கு) ஒன்றியக்குழு சார் பாக இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ்.பூபாலன் தலைமை வகித்தார். சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கோ.அர விந்தசாமி, மாவட்டத் தலைவர் எம்.நவீன், மாவட்டச் செயலாளர் டி. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டி யினை திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி துவக்கி வைத் தார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.அசோகன், எஸ்.சுரேஷ், பள்ளி பாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம். லட்சுமணன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இரவு பகல ஆட்டமாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட விளையாட்டு குழுக்களை சேர்ந்த வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டுனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ.10,001, இரண்டாம் பரிசு ரூ.8001, மூன்றாம் பரிசு ரூ.6001, நான்காம் பரிசு ரூ.4001, ஐந்தாம் பரிசாக ரூ.2001 வழங்கப் பட்டது. இப்பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் சி.விஜயலட்சுமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்க ளுக்கு பரிசினை வழங்கினார்.</p>
