வாலிபர் சங்கத்தினர் ‘கரப்பான் பூச்சி’ பேரணி
25 May 2026, 10:23 pm
<p><strong>வாலிபர் சங்கத்தினர் ‘கரப்பான் பூச்சி’ பேரணி</strong></p><p>திருச்சி, மே 25- வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், சமூகத்தில் `கரப்பான் பூச்சிகள்’ மற்றும் `ஒட்டுண்ணிகள்’ போலச் செயல்பட்டு, ஊடகம், சமூக ஆர்வலர்களாக மாறி ஒட்டுமொத்த அமைப்பையும் தாக்குகிறார்கள் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் இழிவு படுத்தியதை கண்டித்தும், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க கோரியும் திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஞாயிறன்று நூதன முறையில் ‘கரப்பான் பூச்சி’ பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு மாவட்டச் செயலாளர் ரெ.சேதுபதி தலைமை தாங்கினார். பேரணி ஸ்டுடண்ட் ரோட்டில் ஆரம்பித்து அரசு மருத்துவமனை வழியாக புத்தூர் நால்ரோடு வரை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் அரவிந்த்சாமி, புறநகர் மாவட்டச் செயலாளர் பாலகுமார், மாநகர் புறநகர் மாவட்டத் தலைவர்கள் சந்தோஷ், சத்யராஜ் மற்றும் நிர்வாகிகள் பேரணியில் பங்கேற்றனர். </p>
