மாமல்லபுரத்தில் வாலிபர் சங்கம் ரத்ததான முகாம்
31 May 2026, 11:27 pm
<p><strong>மாமல்லபுரத்தில் வாலிபர் சங்கம் ரத்ததான முகாம்</strong> </p><p>மாமல்லபுரம், மே31- செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து டாக்டர் அம்பேத்கர் நினைவு தின ரத்ததான முகாமினை நடத்தி யது. வாலிபர் சங்கத்தின் திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் வே.சுதாகர் தலைமையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் இ.சங்கர் ரத்த தானம் செய்து முகாமினை துவக்கி வைத்தார் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடவெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா, மாமல்லபுரம் நகர மன்ற தலைவர் வளர்மதி எஸ்வந்தர்ராவ், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலை வர் எஸ்.ஜீவானந்தம் , மாவட்ட செயலாளர் இரா.சதீஷ், மாவட்ட பொருளாளர் ந.சுந்தர், ரத்த வங்கியின் மருத்து வர் அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இம்முகா மில் 50க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ரத்ததானம் செய்த னர்.</p>
