கடலூரில் வாலிபர் சங்கம் போதை எதிர்ப்பு தின பேரணி
27 Jun 2026, 12:41 am
<p><strong>கடலூரில் வாலிபர் சங்கம் போதை எதிர்ப்பு தின பேரணி</strong></p><p>கள்ளச்சாராயக் கொடுமைக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த தியாகிகள் கே. குமார் - என். ஆனந்தன் 27-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடலூரில் நடைபெற்ற ‘போதை எதிர்ப்பு தினப் பேரணி’ நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ். வினோத்குமார் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் ஆர்.பி. ஆகாஷ் வரவேற்றார். முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் சே. அறிவழகன், மாவட்டச் செயலாளர் கே. சின்னத்தம்பி, பொருளாளர் எம். கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று போதையில்லாச் சமூகம் படைக்க உறுதிமொழி ஏற்றனர்.</p>
