முந்தய பக்கம்

வாலிபர் சங்க 46 ஆவது அமைப்பு தினம்

5 Nov 2026, 12:46 am
வாலிபர் சங்க 46 ஆவது அமைப்பு தினம்

வாலிபர் சங்க 46 ஆவது அமைப்பு தினம்

உடுமலை, நவ.4-உடுமலையில், நவம்பர் புரட்சி தினம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்புதினம் மற்றும் அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டு தீர்மானங்கள் விளக்க கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.

உடுமலை குரல் குட்டை மார்க்சிஸ்ட் கட்சியின் கிளையின் சார்பில் பகத்சிங் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு, குரல்குட்டை சிபிஎம் வடக்கு கிளைச்செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை ஏற்றார். இதில் அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் கனகராஜ், மாவட்டத் தலைவர் பஞ்சலிங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்நிருபன்சக்கரவர்த்தி, சிபிஎம் உடுமலை ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ரங்கராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கோவை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 46 ஆவது அமைப்பு தினத்தையொட்டி, கோவை அன்னூரில் உறுதிமொழி ஏற்கப்பட்டு, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா பொருளாளர் அர்ஜுன், இடைக்கமிட்டி தலைவர் ரமேஷ்,செயலாளர் ரஞ்சித், பொருளாளர் ரூபா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram