முந்தய பக்கம்

மின் இணைப்பு வழங்கக்கோரி சாயப்பட்டறை உரிமையாளர் தர்ணா

8 Oct 2026, 3:06 am
மின் இணைப்பு வழங்கக்கோரி சாயப்பட்டறை உரிமையாளர் தர்ணா
<p><strong>மின் இணைப்பு வழங்கக்கோரி சாயப்பட்டறை உரிமையாளர் தர்ணா</strong></p><p>நாமக்கல், அக்.7-குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியளர் அலுவலகத்தில், சாயப்பட்டறை உரிமையாளர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமுறைகளுக்கு மாறாகஇயங்குவதாகக்கூறி இவரது சாயப்பட்டறை மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள்தெரிவித்த 11 விதிமுறைகளின்படி தொழிற்சாலையில் மாற்றங்களை மேற்கொண்டு, அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் மின் இணைப்பு வழங்க வேண்டும் என அவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால், தலைமை அலுவலகத்தில் இருந்து கடிதங்கள் வந்தபோதும், குமாரபாளையம் அலுவலக அதிகாரிகள் தனது கோப்புகளை இணை ஆணையருக்கு அனுப்பவில்லை. இதனால் அவருக்கு மின் இணைப்பு கிடைக்காமல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொறியாளர் வாசுகியை சந்திக்க செவ்வாயன்று அலுவலகம் வந்த அவரை, பொறியாளர் சந்திக்க மறுத்துள்ளார்.இதையடுத்து அலுவலகத்துக்குள்ளேயே தரையில் அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்த அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram