முந்தய பக்கம்

திவிக நிர்வாகி உடல் தானம்

17 May 2026, 11:06 pm
திவிக நிர்வாகி உடல் தானம்
<p><strong>திவிக நிர்வாகி உடல் தானம்</strong></p><p>​​​​​​​கோவை, மே.17- மறைந்த திராவிட விடுதலை கழக நிர் வாகி ராமச்சந்திரனின் உடல், கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப் பட்டது. திராவிட விடுதலை கழகத்தின் கோவை புறநகர் மாவட்டத் தலைவராக ராமச்சந்தி ரன் என்பவர் செயல்பட்டு வந்தார். இந்நிலை யில், வயது முதிர்வு காரணமாக ஞாயிறன்று காலை உயிரிழந்தார். இதையத்தொடர்ந்து, அவரது விருப்பப்படி மருத்துவ ஆய்வுக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் திராவிட விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், உலக அளவில் கண் தானத்தில் இலங்கை போன்ற சிறிய நாடே முதன்மை யாக திகழ்கிறது. ஆனால், இவ்வ ளவு பெரிய இந் திய நாட்டில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு இன்னும் போதிய அளவில் ஊக்குவிக்கப்படவில்லை. எனவே, இயக்க தோழர்கள் மற்றும் பொது மக்கள் உடல் தானத்தோடு சேர்த்து, கண் தானம் செய்வதையும் ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram