தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமுளி, போடி மெட்டு, முந்தல் காவல் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

10 Jul 2026, 9:05 pm
குமுளி, போடி மெட்டு, முந்தல் காவல் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
<p><strong>குமுளி, போடி மெட்டு, முந்தல் காவல் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை</strong></p><p>தேனி ,ஜூலை.10- கேரள -தமிழக எல்லையில் குமுளி,முந்தல் ,போடி மெட்டு ஆகிய சோதனைச் சாவடி களில் வெள்ளியன்று லஞ்ச ஒழிப் புத்துறையினர் திடீர் சோதனை யிட்டனர். இதில் ரூ.35,750 பறி முதல் செய்யப்பட்டு 7 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாநில எல்லைகள் மற்றும் முக்கிய நுழைவுப் பகுதிகளில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடி களில் லஞ்சழிப்புத்துறை சார்பில் வெள்ளியன்று திடீர் சோதனை நடைபெற்றது. குமுளியில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் பழனிச் சாமி தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர்.அப்போது சோத னைச் சாவடியை கடந்து சென்ற சரக்கு வாகனங்கள், தனியார் வாகனங்கள் மற்றும் பிற வாக னங்களின் ஆவணங்கள் முறை யாக பரிசோதிக்கப்படுகிறதா என்று சரிபார்க்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்திற் கும் மேலாக நடைபெற்ற இச் சோதனையில் கணக்கில் வராத ரூ.26,460 கைப்பற்றப்பட்டது. இவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை யினர் பறிமுதல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கள் கூறுகையில், பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அய்யப்பன், காவலர்கள் அருளானந்தம், பாஸ்கரன் ஆகி யோரிடம் பணம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நட வடிக்கை எடுக்கவும் பரிந்துரைக் ்கப்பட்டுள்ளது என்றனர். இதேபோல் முந்தல், போடி மெட்டு சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் ராமேஸ்வரி, ரூபாகீதாராணி ஆகி யோர் இச்சோதனையில் ஈடுபட்ட னர். இதில் முந்தலில் ரூ.3 ஆயிரத்து 500, போடிமெட்டில் ரூ.5,790-ம் கைப்பற்றப்பட்டது. இங்கு பணிபுரிந்த 4 காவலர்க ளுக்கு விசாரணை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் 3இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் மொத் தம் ரூ.35,750 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸார் கூறு கையில், இந்த மலைச்சாலைக ளில் ஏராளமான கனிமவளம் மற்றும் இதர சரக்கு வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இதில் லஞ்சம் வாங்குவதாக வந்த புகா ரின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்றது என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.