முந்தய பக்கம்

தென்னிந்தியா முழுவதும் சைக்கிள் பயணத்தை தொடங்கிய நெதர்லாந்து சுற்றுலா பயணிகள்

25 Nov 2025, 3:29 pm
தென்னிந்தியா முழுவதும் சைக்கிள் பயணத்தை  தொடங்கிய நெதர்லாந்து சுற்றுலா பயணிகள்
<p><strong>தென்னிந்தியா முழுவதும் சைக்கிள் பயணத்தை &nbsp;தொடங்கிய நெதர்லாந்து சுற்றுலா பயணிகள்</strong></p> <p>தஞ்சாவூர், நவ.25 - &nbsp;தென்னிந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள, தஞ்சாவூர் பெரிய கோவி லில் இருந்து பயணத்தை தொடங்கி யுள்ளனர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் வந்தனர். இதில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து 40-க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளனர். நவீன வசதி களுடன் கூடிய சைக்கிளில் கேமரா பதிவுகளுடன் இந்த பயணத்தை தொடங்கியுள்ளனர். முன்னதாக பெரிய கோவிலுக்குச் சென்று கோவிலில் உள்ள கல்வெட்டு கள், சிற்பங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு பயணத்தை தொடங்கினர். ஒரு மாத காலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்தியா முழு வதும் சென்று, பல்வேறு சுற்றுலா தலங்களையும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும் பார்வையிட்டு, அதன் விவரக் குறிப்புகளை எடுத்துச் செல்ல உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram