தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

4 Jun 2026, 10:53 pm
ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
<p>கோவை, ஜூன் 4-</p><p>சென்னை மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.</p><p>கோவை விமான நிலையத்தில் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சென்னை மின்வாரிய அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான 10 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், மின்துறை அமைச்சரும், அதிகாரிகளும், காவல்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எதனால் களவாடப்பட்டது என்பதை காவல்துறை கண்டறிய வேண்டும். தமிழகத்தில் விவசாயக்கடன் தள்ளுபடியை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தப்படும் நிலையில், தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டே சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது முழுமையாக நிறைவேற்றப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அரசின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்போது, தேர்தல் வாக்குறுதிகளில் எதையெல்லாம் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும் என்பது மக்களுக்குத் தெளிவாகும். புதிய ஆட்சிப்பொறுப்பேற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு, குற்றச்சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் நடமாட்டத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த கால அவகாசம் தேவை என முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலாவது கால அவகாசம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும் குற்றம் சாட்டுவது சரியல்ல, என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.