தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நில அபகரிப்பு கும்பலுக்கு டிஎஸ்பி, வட்டாட்சியர் ஆதரவு

17 Nov 2025, 4:40 pm
நில அபகரிப்பு கும்பலுக்கு டிஎஸ்பி, வட்டாட்சியர் ஆதரவு
<p><strong>நில அபகரிப்பு கும்பலுக்கு டிஎஸ்பி, வட்டாட்சியர் ஆதரவு</strong></p> <p>தருமபுரி, நவ.17- நில அபகரிப்பு கும்பலுக்கு ஆத ரவாக செயல்படும் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியரை கண்டித்தும், இவர் கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், மணிகாரன்கொட் டாய் கிராமத்தை சேர்ந்தவர் குழந் தை. விவசாயி-யான இவருக்கு சொந்தமாக நான்கரை ஏக்கர் நிலம் உள்ளது. இவரின் பக்கத்து &nbsp;நிலத்தை வாங்கிய நபர், குழந்தை யின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய &nbsp;முயற்சித்து வருகிறார். அதன்ஒரு பகுதியாக, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜசுந்தராஜ் தலைமையிலான போலீசார், அடி யாட்களுடன் ஜெசிபி இயந்திரத்து டன் நவ.14 ஆம் தேதியன்று குழந்தையின் வீட்டை இடிக்க &nbsp;சென்றுள்ளனர். மனவேதனைய டைந்த குழந்தை குடும்பத்துடன் மண்ணென்னைய் ஊற்றி தீக்க ளிக்க முயறிசித்துள்ளார். இதே போன்று, கல்கூடைபட்டியை சேர்ந்த விவசாயி-யின் அனுபவ நிலத்தை அபகரிக்க காவல் துறை யினருடன் சென்றுள்ளனர். ஜேசிபி இயந்திரத்தை வைத்து வீட்டை இடிக்க முயற்சித்துள்ளனர். மேலும், எர்ரணஅள்ளி கிராமத் தை சேர்ந்த சண்முகம், ஜிட்டாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந் தராஜ் ஆகியோருக்கு சொந்தமான நிலம் குறித்தான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் இருக் கும் போது, நிலத்தை ஆக்கிரமிப்பு &nbsp;செய்ய பாலக்கோடு காவல்துணை &nbsp;கண்காணிப்பாளர் ராஜசுந்தராஜ் &nbsp;தலைமையில் போலீசார் ரவுடி கும் பலுடன் நில ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு ஆதரவாக செயல்படுகின்ற னர். மேலும், கோவிந்தராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மகேந்திரமங்கலம் காவல் நிலை யத்திற்கு அழைத்து சென்று கடுமை யாக தாக்கியுள்ளனர். நில ஆக்கிர மிப்பு கும்பலுக்கு ஆதரவாக பாலக் கோடு வட்டாட்சியர் அசோக்குமார் செயல்பட்டு வருகிறார். மாவட்ட துணை காவல் கண் காணிப்பாளராக ராஜசுந்தராஜ் பொறுப்பேற்ற பின்பு, நில அபகரிப் பாளர்களுக்கு துணை நின்று, நிலப் பிரச்சனையில் தலையிட்டு காவ லர்களையும், ரவுடிகளையும் அனுப்பி, விவசாயிகளின் வீடு களை சட்ட விரோதமாக இடித்துள் ளார். நிலத்தை அபகரித்து சட்ட ஒழுங்கை சீரழிக்கும் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் &nbsp;துணை போகும் காவலர்கள், வட் டாட்சியர்கள், நிள அளவையர், வருவாய் துறை அதிகாரிகள் மீது &nbsp;துறை ரீதியான நடவடிக்கை வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பாலக்கோடு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, கட்சியின் வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன், &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சி. நாகராசன், மாவட்டக்குழு உறுப்பி னர் சி.கலாவதி, வட்டக்குழு உறுப் பினர்கள் பி.கோவிந்தசாமி, ஏ. சேகர், என்.வரதராஜ், ஜி.பாண்டி யம்மாள், பி.முருகன், சி.ராஜா, கே. எம்.முருகேசன், வி.உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.