தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

3 Jun 2026, 9:50 pm
மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
<p><strong>மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 3- இராமநாதபுரத்தி லிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய தாகக் கூறப்படும் தற்காலிக ஓட்டுநரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் திருவாடானை அருகே பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரத்திலிரு ந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. பேருந்து தொண்டி அருகே சென்றபோது கட் டுப்பாடின்றி தாறுமாறாகச் சென்றதாகக் கூறப்படுகி றது. இதனால் அதிர்ச்சிய டைந்த பயணிகள் உடனடி யாக அப்பகுதி பொதுமக்க ளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தொண்டி பகுதியைச் சேர்ந்த இளை ஞர்கள் மற்றும் பொதுமக் கள் சிலர் இருசக்கர வாக னங்களில் பேருந்தைத் துரத்திச் சென்றனர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பி.வி.பட்டினம் கிரா மம் அருகே பேருந்தை வழி மறித்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநரை கீழே இறக்கி விசாரித்தபோது அவர் கடுமையான மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை யில், அவர் காட்டுமன்னார் குடி பகுதியைச் சேர்ந்த மனோ என்பதும், ஒருநாள் மாற்றுப் பணிக்காக தற்காலி கமாக அந்தப் பேருந்தை இயக்க வந்திருந்ததும் தெரியவந்தது. சம்பவத்தையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப் பட்டனர். பின்னர் மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப் பட்டு அவர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் மற்றும் பொது மக்களின் சமயோசித நட வடிக்கையால் நூற்றுக்க ணக்கான உயிர்கள் காப் பாற்றப்பட்டதுடன், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த னர். இச்சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். அரசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய தாக எழுந்துள்ள இந்த குற் றச்சாட்டு, போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு நடை முறைகள் குறித்த கேள்வி களை எழுப்பியுள்ளதுடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.