கடலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
18 Feb 2026, 3:04 pm
<p><strong>கடலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி</strong></p>
<p>கடலூர், பிப்.18- போதைப் பொருட்களை ஒழித்திடவும், போதைப் பொருட்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நிலையினை உரு வாக்கிடவும் பல்வேறு சிறப்பு முன்னெடுப்பு களை தமிழக முதலமைச்சர் எடுத்து வருகிறார்கள். காவல்துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, கலால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, போக்கு வரத்துத்துறை உள்ளிட்ட அரசுத் துறை களின் வாயிலாக போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணிகள், பிரச்சாரங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் மது, புகையிலை, கூல்லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கும், அவர்கள் எதிர்காலத்தினை ஒளிமயமானதாக மாற்றவும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுஇடங்களில் போதைப் பொருள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சிய ரால் பிப்.16 அன்று விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேடை நாடகக் கிராமிய கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.</p>
