போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு:விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
12 Aug 2026, 9:45 pm

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு:விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

தென்காசி, ஆக.12 -ஆய்க்குடி ஜே.பி. பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் செவ்வாயன்று “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையேவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ, மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர்ரஞ்ஜீத் சிங், கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

போதைப் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சமூக,உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிகழ்ச்சியில்வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.