ஊதியக்குழுவிற்கு எதிரான ஆலோசனைகளை கைவிடுக
12 Mar 2026, 4:20 pm
<p><strong>ஊதியக்குழுவிற்கு எதிரான ஆலோசனைகளை கைவிடுக ஒன்றிய அரசுக்கு பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்</strong></p>
<p>ஈரோடு, மார்ச் 12- ஓய்வூதியர்களுக்கு எதிராக 8 ஆவது ஊதியக்குழுவிற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ள ஆலோசனை களை கைவிட வேண்டும் என பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 8 ஆவது மாநாடு, ஈரோடு என்.ஆர்.திருமண மண்டபத்தில் வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சி.பரம சிவம் தேசியக்கொடியையும், சிறப்பு அழைப்பாளர் எஸ்.அய்யா சாமி சங்கத்தின் கொடியையும் ஏற்றி வைத்தனர். மாவட்டத் தலை வர் பி.சின்னசாமி தலைமை வகித் தார். துணைச்செயலாளர் கே.என். முகமது ரபி அஞ்சலி உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் வி. மணியன் வரவேற்றார். அகில இந்திய அமைப்பு செயலாளர் என்.குப்புசாமி, அகில இந்திய துணை பொதுச்செயலாளர் ஏ.குடியரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.பாலு, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பழனிசாமி, அஞ் சல் ஓய்வூதியர் சங்க கோட்டச் செய லாளர் என்.ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், பாலஸ்தீ னத்தை அழித்து நாசமாக்கும் இஸ் ரேலுடன் இணைந்து உலக எண் ணெய் வளத்தைக் கொள்ளைய டிக்கும் நோக்கில் ஈரான் மீது அமெ ரிக்கா போர் தொடுத்துள்ளது. இத னால் எரிபொருள் நெருக்கடி உல கம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இம்மாநாடு கண்டனம் தெரிவித்துள்ளது. இந் நிலையில், எரிவாயு தட்டுப்பாட்டை போக்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய மாற்றம் மற்றும் பென்சன் மாற்றம் செய்திட வேண்டும். பிஎஸ்என்எல் சேவையை மேம் படுத்தி வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களை நாடுவதை தடுக்க வேண்டும். நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், இரண்டாவது விஆர்எஸ் திட்டம் செயல்படுத்த உத்தேசிப்பதை கைவிட வேண் டும். பென்சன் வேலிடேசன் சட்டத்தை திரும்பப்பெற வேண் டும். 8 ஆவது ஊதியக்குழுவில் ஓய்வூதியர்களுக்கு எதிராக ஒன் றிய அரசு வழங்கியுள்ள ஆலோ சனைகளை கைவிட வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி.சின்ன சாமி, செயலாளராக எம்.நட ராஜன், பொருளாளராக ஜி.வெங்க டேசன் மற்றும் 7 உதவித்தலைவர் கள், 7 உதவிச்செயலாளர்கள், 8 அமைப்பு செயலாளர்கள், தணிக் கையாளராக எஸ்.ரங்கராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். மாநில உதவிச்செயலாளர் எல். பரமேஸ்வரன் நிறைவுரையாற்றி னார். முடிவில், ஜி.வெங்கடேசன் நன்றி கூறினார்.</p>
<p> </p>
