தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

யானைகள் ரயிலில் அடிபடுவதை தடுக்க டிரோன் வசதி அறிமுகம்!

1 Mar 2026, 5:56 pm
யானைகள் ரயிலில் அடிபடுவதை தடுக்க டிரோன் வசதி அறிமுகம்!
<p><strong>யானைகள் ரயிலில் அடிபடுவதை தடுக்க டிரோன் வசதி அறிமுகம்!</strong></p> <p>கோவை, மார்ச் 1- மதுக்கரை வனப்பகுதி வழி யாக செல்லும் ரயில்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிபடா மல் தடுக்க புதிய முயற்சியாக டிரோன் கண்காணிப்புப்பிரிவை வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப் பன் துவங்கி வைத்தார். தமிழ்நாடு - கேரளம் எல்லை யான, கோவை மாவட்டம், மதுக்கரை &nbsp;வனப்பகுதியில் ரயில் பாதையில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்ந்தது. இதை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் &nbsp;ரயில் பாதையில் பொருத்தப்பட்டது. இந்த முயற்சி பெரிய அளவில் பலன் கொடுத்தது. இந்நிலையில் வனவிலங்குகள் சார்ந்த பாது காப்பை பலப்படுத்த புதிய முயற்சி யாக கம்பி இணைப்பு டிரோன் கண் காணிப்புப்பிரிவு சனியன்று திறக்கப் பட்டது. வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மதுக்கரையில் டிரோன் கண்காணிப்புப்பிரிவை தொடங்கி வைத்து, அறை செயல் பாடுகளை பார்வையிட்டார். இது குறித்து அமைச்சர் ராஜகண்ணப் பன் கூறுகையில், ரூ.8.67 கோடி &nbsp;செலவில் வனப்படை நவீனமயமாக் கல் திட்டத்தின் மூலம் டிரோன் கண் காணிப்புப்பிரிவு திறக்கப்பட்டுள் ளது. ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். ரயில்களில் வனவிலங்குகள் அடிப்படாமல் தடுக்க வனத்துறை எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்து &nbsp;மற்ற மாநிலத்தில் இருந்தும் கேட் கின்றனர். தற்போது 3 டிரோன்கள் பயன்படுத்தபடுகிறது, என்றார். இந்நிகழ்வில், வனத்துறை மற் றும் சுற்றுச்சூழல் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட &nbsp;ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பன வர், ஆளில்லா வான்வழி வாகன கழக அரசு செயலாளர் ப.சங்கர், முதன்மை தலைமை வனத்துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் ரா.ரெட்டி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.