வாகன புதுப்பிப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு! கண்டித்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>வாகன புதுப்பிப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு! கண்டித்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>புதுச்சேரி, டிச.10- வாகனங்கள் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை பன் மடங்கு உயர்த்தி உள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றிய பாஜக அரசு, மோட்டார் வாகனத்திற்கான எப்.சி கட்டணத்தை 200 மடங்கும்,இரண்டு சக்கரம்,மூன்று சக்கர வாகனங்கள், 4 சக்கர வாக னங்கள்,பேருந்து, லாரி,வேன் போன்ற கனரக வாகனங்களின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திருப்பதை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மதகடிப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் கீழே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சிஐடியு புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் சீனுவாசன், தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மதிவாணன், தனியார் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அன்புமணி,சிஐடியு மாநில நிர்வாகிகள் லிங்கேசன்வேலு, மணிபாலன் மற்றும் நிர்வாகிகள் சஞ்சீவி, சதீஷ்,ஜீவா தண்டபாணி, உள்ளிட்ட திரளான போக்குவரத்து ஊழியர்கள் இப் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக வாகனங்களின் பழுது பார்க்கும் கட்டணங்கள உயர்த்தி உள்ளதை ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.</p>
