தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மரக்கிளைகளால் அரசு பேருந்துகளின் கண்ணாடி சேதம் சம்பளத்தில் பணம் பிடிப்பதால் ஓட்டுநர்கள் அதிருப்தி

2 Feb 2026, 4:51 pm
மரக்கிளைகளால் அரசு பேருந்துகளின் கண்ணாடி சேதம் சம்பளத்தில் பணம் பிடிப்பதால் ஓட்டுநர்கள் அதிருப்தி
<p><strong>மரக்கிளைகளால் அரசு பேருந்துகளின் கண்ணாடி சேதம் சம்பளத்தில் பணம் பிடிப்பதால் ஓட்டுநர்கள் அதிருப்தி</strong></p> <p>உதகை, பிப்.2- மலைப்பாதைகளில் ஓங்கி வளர்ந்துள்ள மரக்கிளைகளால், அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகளில் கண்ணாடி சேதம டைந்து வருவதற்கு, போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் மாதந் தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்வதால் ஓட்டுநர்கள் கடும் அதி ருப்திக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அரசு &nbsp;போக்குவரத்து கழக மண்டலத்திற் குட்பட்ட உதகை, கோத்தகிரி, கூட லூர் உள்ளிட்ட பணிமனைகளிலி ருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட் டம், கேரளம், கர்நாடகா உள்ளிட்ட &nbsp;மாநிலங்களுக்கு 270 வழித்தடத்தில் 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பிற மாவட்ட போக்குவரத்து கழக &nbsp;பணிமனையில் இருந்து உதகைக்கு அரசு பேருந்துகள் வந்து செல்கின்றன. நீலகிரி மாவட்டத்திற்கு முக்கிய நுழைவு வாயில் பகுதியான பர்லியார் முதல் &nbsp;கக்கநல்லா வரை மற்றும் கிராமங் களுக்கு அரசு பேருந்துகள் இயக் கப்படுகின்றன. மாவட்டத்தில் பல கி.மீ., சாலை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலை யில் இருபுறம் ஓங்கி வளர்ந்துள்ள &nbsp;மரக்கிளைகள் மற்றும் புதர்கள், &nbsp;பெரும்பாலான சாலைகளில் ஆண்டுக்கணக்கில் அகற்றப்படா மல் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளர்கள் &nbsp;பற்றாக்குறை ஒரு புறம் நிலவினா லும், மறுபுறம் சாலையின் இரு புறம் வளர்ந்துள்ள புதர்களை அகற் றப்படாமல் விட்டுள்ளனர். குறிப்பாக, நீலகிரியிலிருந்து பல்வேறு கிராமப்புறங்கள், பிற மாவட்டங்களுக்கு, அதேபோல், வெளி மாவட்டத்திலிருந்து உதகைக்கு அரசு பேருந்துகள் வந்து செல்கின்றன. மலைப்பாதை &nbsp;வழியாக வரும் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள், மரக் கிளைகளால் உடைந்து வருகின் றன. சேதமாகும் பேருந்துகளின் கண்ணாடிகளுக்கு, ஓட்டுநர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் பிடித் தம் செய்கின்றனர். இதுவரை 55 &nbsp;பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்ததால், மாத சம்பள பிடித் தத்தால் ஓட்டுநர்கள் கவலைய டைந்துள்ளனர். இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் கூறுகையில், மலை மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க &nbsp;சமீப காலமாக சவாலாகவும் அச் சத்துடனும் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென் றால் திடீர் திடீரென உள்பக்க கண் ணாடிகளை மரக்கிளைகள் திடீ ரென சாய்ந்து சேதப்படுத்துவ தால் மிகுந்த அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, முன்பக்க கண்ணாடி உடையும் பட்சத்தில், அதிகாரிகள் அந்த கண்ணாடியை அதே கம் பெனிக்கு கொண்டு சென்று, புதி தாக மாற்ற ரூ.24,000 தொகையை &nbsp;நிர்ணயித்து, ஓட்டுநர்களின் சம்ப ளத்தில் மாதந்தோறும் ரூ.2000 வீதம் &nbsp;12 மாதங்கள் பிடித்தம் செய் கின்றனர். பயணியரின் நிலையை &nbsp;கருத்தில் கொண்டு பாதுகாப்பாக &nbsp;இயக்கினாலும், மலைப்பகுதிக ளில் மன வேதனையுடன் பேருந்து களை இயக்க வேண்டிய நிலைக்கு &nbsp;தள்ளப்பட்டுள்ளோம். போக்குவ ரத்து துறை அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.