கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
11 Dec 2025, 5:47 pm

போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

மேட்டுப்பாளையம், டிச.11- மது போதையில் மினி பேருந்தை இயக்கிய ஓட்டுநரை போலீசார் பிடித்து அபராதம் விதித்து, பேருந்தை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து உள்ளூர் கிராம பகுதிகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழ னன்று காலை காரமடையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த என்.எம்.எஸ் என்ற தனியார் மினி பேருந்து ஓட்டு நர் மது போதையில் பேருந்தை ஓட்டி வருவதாக போக்கு வரத்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத னையடுத்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்த டைந்த அந்த பேருந்து ஓட்டுநரை விசாரித்தனர். அப்போது அவர் மது போதையில் உள்ளாரா என்று பரிசோதனை செய்த போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதைய டுத்து பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் மது போதை யில் இருந்த பேருந்து ஓட்டுநருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபரா தம் விதித்தனர்.

வியாபாரி கொலை: 3 பேர் கைது

தருமபுரி, டிச.11- ஒகேனக்கல் பகுதியில் காய்கறி வியாபாரியை அடித்துக் கொலை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே நீலகிரி பிளட் காவிரி கரையோரப் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக ஒகேனக்கல் காவல் துறையினருக்கு திங்க ளன்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீ சார் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்தவர் கிருஷ்ணகிரி மாவட் டம், அஞ்செட்டி அருகே மராத்தி தெருவைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ருத்ராஜி ராவ் (34) என்பது தெரியவந்தது. மேலும், ஊட்டமலை இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த நாகராஜ் (45) என்பவர், ருத்ராஜி ராவ்-யிடம் கடனாக வாங்கிய ரூ.40 ஆயி ரத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுதொடர் பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், ஊட்டமலை அருகே நீலகிரி பிளட் பகுதிக்கு ருத்ராஜி ராவை மது அருந்துவதற்காக நாகராஜ் அழைத்து சென்றுள் ளார். அப்போது, பணத்தை திருப்பித்தருவது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை யடுத்து, கேரட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (45), சாணார் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (32) ஆகியோ ருடன் சேர்ந்து, சேவல் சண்டைக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு ருத்ராஜி ராவின் வயிறுப் பகுதியை வெட்டியும், நீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதைய டுத்து 3 பேரையும் போலீசார் புதனன்று கைது செய்தனர்.

கொலை வழக்கில் சிறுவனுக்கு நூதன தண்டனை

கோவை, டிச.11- கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளியான சிறுவனுக்கு பள்ளிவாசலில் தங்கி, சமூகப் பணியாற்ற வேண்டும் என்று நூதன தண்டனை விதித்து கோவை சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பூ மார்க்கெட்டில் பென்சில் விற்பனை செய்து வந் தான். மது அருந்தும் பழக்கமும் கொண்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு ஒரு நாள், வேலை முடித்துவிட்டு, பேருந்தில் சென்று மைல்கல் பகுதியில் இறங்கினார். பின்னர், தன்னுடன் பழக்கமான லோகநாதன் என்பவரைச் சந்தித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று லோகநாதன் மறுத்ததும், ஆத்திரமடைந்து, லோகநாதனைத் துரத்திச் சென்று தலையில் கல்லால் அடித்து கொலை செய்துள் ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்து கோவை சிறுவர்கள் சீர் திருத்தப் பள்ளியில் அடைத்தனர். வழக்கு கோவை சிறு வர்களுக்கான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சிறுவன் கோவை குனியமுத்தூரில் உள்ள பள்ளிவாசலில் தங்கி 6 மாதங்கள் சமூகப் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இதை செய்யத் தவறினால், மீண்டும் கைது செய்து கோவை மத்திய சிறையில் 3 ஆண்டுகள் அடைத்து, கல்வி, தொழில் பயிற்சி, மனோதத்துவ ஆலோசனை உள்ளிட்ட மனமாற்ற நட வடிக்கைகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டது. மேலும், கொலை செய்யப்பட்ட லோகநாதனின் குடும் பத்துக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

உதகை, டிச.11- பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத் தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உதகையை அடுத்த மேட்டுச்சேரி அருகே வனப்பகுதி இருப்பதால், இரவு நேரங்களில் வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து நாய் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வருகின்றன. இந்நிலையில், புதனன்று மாலை அப்பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து, வியாழனன்று காலை பொதுமக் கள் வெளியே சென்று பார்த்தபோது, ஒரு குதிரை தாக்கப்பட்டு இறந்து கிடந்தது. சிறுத்தை தாக்கி குதிரை இறந்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி னர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், இரவு நேரத்தில் மட்டும் ஊருக்குள் சிறுத்தைகள் புகுந்து வந்த நிலையில், தற்போது பகல் நேரத்தில் வந்து விடுகின் றன. எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.