ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த லாரி, நான்கு கார்கள் மீது மோதி விபத்து
21 Dec 2025, 3:21 pm
<p><strong>ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த லாரி, நான்கு கார்கள் மீது மோதி விபத்து</strong></p>
<p>கோவை, டிச.21- கோவையில் லாரி ஓட்டுந ருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப் பால், கட்டுப்பாட்டை இழந்து நான்கு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. கோவை, பேரூர் பகுதி யைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமார், உதவியாளர் இளை யரசு ஆகியோர், சரவணம்பட்டி பகுதியி லுள்ள தனியார் கம்பெனி ஒன்றுக்கு சிலிக் கான் லோடு சனியன்று இரவு இறக்கியுள்ள னர். இதன்பின் அங்கிருந்து துடியலூர் சாலையிலிருந்து சரவணம்பட்டி சாலையை இணைக்கும் பகுதிக்கு சென்று கொண்டிருந் தனர். அப்பொழுது ஓட்டுநர் குமாருக்கு திடீ ரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, திடீரென எதிர் திசையில் பாய்ந்து, சாலையில் சென்றுக் கொண்டிருந்த நான்கு கார்கள் மீது மோதியது. இதையடுத்து இளையரசு துரிதமாக செயல்பட்டு, லாரியின் பிரேக்கை அழுத்தி வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்தினார். இதனால் மேலும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, அக்கம், பக்கத் தினர் உதவியுடன் ஓட்டுநர் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லாரி ஓட்டுநர் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர் செய்தனர். இவ்விபத்தின் கண்கா ணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளி யாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
