விதொச தலையீட்டால் குடிநீர் தொட்டி அமைப்பு
1 Jan 2026, 4:14 pm
<p>ஈரோடு, ஜன.1- விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் தலையீட்டால், 60.வேலம்பாளை யம் ஊராட்சியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், 60.வேலம்பாளையம் ஊராட் சிக்குட்பட்டது இந்திரா நகர். இங்கு நில வும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் முறையிடப்பட்டது. அதனை ஏற்று ‘நம்ம ஊரு நம்ம அரசு’ திட்டத்தின் கீழ் ரூ.78 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட் டது. அதன் மூலம் புதிதாக மேடை அமைத்து, 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு அப்பகுதி மக் களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள் ளது. கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கும், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், 60. வேலம்பாளையம் ஊராட்சி நிர்வா கத்திற்கும் அப்பகுதி மக்கள் சார்பில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகாக்குழு நன்றியை தெரிவித்துள்ளது.</p>
