முந்தய பக்கம்

குடிநீர் தொட்டி திறப்பு விழா

23 Jan 2026, 5:49 pm
குடிநீர் தொட்டி திறப்பு விழா
<p><strong>குடிநீர் தொட்டி திறப்பு விழா&nbsp;</strong></p> <p>திருப்பூர், ஜன. 23 - திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சி 7 ஆவது &nbsp;வார்டு, குளத்தோட்டம், சாருவர்ஷினி கார்டனில் புதிதாக குடி நீர் தொட்டி திறக்கப்பட்டது. 15 ஆவது நிதிக் குழு மானியத்தில் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் &nbsp;புதிதாக ஆழ்குழாய் கிணறு மற்றும் மின் மோட்டார் அமைக்கப் பட்டது. இதன் மூலம் குளத்தோட்டம் மற்றும் வெள்ளையன் &nbsp;தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இந்நி கழ்விற்கு ஊத்துக்குளி பேரூராட்சி 7 ஆவது வார்டு கவுன் சிலர் சரஸ்வதி தலைமை வகித்தார். ஊத்துக்குளி பேரூ ராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுக்குட்டி மின்மோட்டார் பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார். ஊத்துக்குளி பேரூ ராட்சி துணைத் தலைவர் வி.ஏ.சரவணன், முன்னாள் தலைவர் &nbsp;ஆர்.குமார், ஊத்துக்குளி சிபிஎம் கிளைச் செயலாளர் பெரிய சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram