தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குளறுபடி சரி செய்யப்படும் உடுமலை திமுக வேட்பாளர் ஜெயக்குமார் உறுதி

9 Apr 2026, 5:30 am
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குளறுபடி சரி செய்யப்படும் உடுமலை திமுக வேட்பாளர் ஜெயக்குமார் உறுதி

கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குளறுபடி சரி செய்யப்படும் உடுமலை திமுக வேட்பாளர் ஜெயக்குமார் உறுதி

உடுமலை, ஏப். 8- உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ஜெயக்குமார், குருமலை, ஜல்லிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள வி.வல்லக்குண்டாபுரம், அணிக்கடவு, விருக்கல்பட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், வீதம்பட்டி, வ.வேலூர், வாசல்தொழுவு மற்றும் கொசவம்பாளையம் ஆகிய பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அவர் வாக்குச் சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மத்தியில் ஜெயக்குமார் பேசுகையில், “விவசாயம் தொழில் வளர்ச்சிச் சரிபாதியாகக் கொண்ட குடிமங்கலம் ஒன்றியத்தில், கடந்த பத்து ஆண்டுகளாக பதவியில் இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. நான் வெற்றி பெற்றால், தொகுதித் அணைத்து இருப்பிடங்களிலும் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் கண்டறியப்படும். மக்களுக்குத் தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.