தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

12 Dec 2025, 3:12 pm
கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குடியிருப்புப் பகுதியில் முகாமிட்ட 3 யானைகள்: பொதுமக்கள் அச்சம்

கோவை, டிச.12- அன்னூர் அருகே காக்காபாளையம் கிராமத்தில் தைல மரத் தோப்பில் 3 யானைகள் முகாமிட்டதால் அப்பகுதி யில் பரபரப்பு நிலவியது. கோவை நகரப்பகுதியின் அருகில் உள்ள கீரணத்தம்  பகுதியில் வியாழனன்று மூன்று யானைகள் உலா வந்தன. இந்த 3 யானைகள், புதனன்று அதிகாலை அங்கிருந்து  நகர்ந்து அன்னூர் அருகே உள்ள காக்காபாளையம் பகுதிக்கு வந்தது. சாலையை கடந்து தைலமரத் தோப்பிற்குள் நுழைந் தது. வனப்பகுதிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத இடத்தில்  திடீரென யானைகளை பார்த்த பொதுமக்கள் அச்சம டைந்து அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். யானைகளை பின் தொடர்ந்து, 5 குழுக்களாக பிரிந்து செயல்பட்டு, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், சுமார் 20 கிலோமீட்டர் தொலை வில் உள்ள சிறுமுகை வனப்பகுதிக்கு யானைகளை விரட்டிச் செல்ல வேண்டும் என்பதால், அதற்கான உத்திகள் குறித்து வனத்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மூன்று ஆண் யானைகள் வனத்தைவிட்டு நீண்ட தூரம் பயணித்து, தரிசு நிலங்கள் மற்றும் விளைநிலங்கள் வழியாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்துள்ளன. யானை களின் நடமாட்டத்தை ட்ரோன் உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் யானைகளைப் பார்க்க ஆர்வக் கோளாறில் கூட்டமாக வருவது, வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில்  ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இது யானை களை ஆத்திரமூட்டி தாக்குதலுக்கு இட்டுச் செல்ல வாய்ப் புள்ளது” என்றனர். கோவை மாவட்டத்தில் அண்மை காலமாக யானைகள் அடிக்கடி நகரத்தின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வரத்தொடங்கியுள்ள நிலையில், இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிச.27, 28 இல் பறவைகள் கணக்கெடுப்பு
தருமபுரி, டிச.12- வரும் டிச.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணிக்கு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி வனக்கோட்டத்தில் 2025 – 26 ஆம் ஆண்டிற் கான ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி டிச.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பற வைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களும், பறவைகளை  அடையாளம் காணத் தெரிந்தவர்களும், (தன்னார்வலர் கள், அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர், அறிவியல் நிறுவ னங்கள், உயிரியலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பறவை சூழலியலாளர்கள்) கலந்து கொள்ளலாம். அதற்காக டிச.26 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் தருமபுரி, மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள  கட்டணமில்லா தொலை பேசி எண். 1800 425 4586இல் தொடர்பு  கொண்டு தங்களின் பங்களிப்பு குறித்து பெயர், தொலைபேசி எண் மற்றும் ஊர் போன்ற விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் ஆறாய் பாய்ந்த குடிநீர்

கோவை, டிச.12- மாநகரத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் கள் உடைந்து லட்சக்கணக் கான லிட்டர் குடிநீர் ஆறாக சாலையில் ஓடியது. கோவை, நஞ்சப்பா சாலை, கேஜி திரையரங்கம், திருச்சிசாலை எல்ஐசி முன்பு  என கோவை நகரின் முக்கிய போக்குவரத்து பாதைகளில் குடிநீர் குழாய் உடைந்தது. திடீரென குடிநீர் விநியோ கிக்கப்படும் நேரத்தில் குழாய் உடைந்ததால், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் பிரதான சாலைகளில் ஆறாக ஓடியது. இதுகுறித்து அப்பகுதி யினர் கூறுகையில், “சாலை யில் தண்ணீர் தேங்கியுள்ள தால் வாகனங்கள் சறுக்கி  விபத்துக்கு ஆளாகும் அபா யம் உள்ளது. போக்குவரத்து தாமதமாகி வர்த்தகர்கள் பாதிக்கப்படுகின்றனர்” என் றனர். அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள், “தண்ணீர் கடை முன் ஓடுவ தால் பொருட்கள் ஈரம டைந்து விற்பனை பாதிக்கி றது. லாரிகள் இறக்க-ஏற்று வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது” என புகார் கூறினர். கோவை மாநகராட்சி அதிகாரிகள், உடைப்பை சரிசெய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாக தெரிவித்துள்ள னர். “தண்ணீர் விநியோ கத்தை தற்காலிகமாக நிறுத்தி, சரிசெய்யும் பணி கள் நடைபெறுகின்றன. விரைவில் சாலை இயல்பு நிலைக்கு திரும்பும்” என்ற னர்.

திருப்பூர் - அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசம்

திருப்பூர், டிச. 12 - திருப்பூர் - அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிச லைக் குறைக்கும் நோக்கில் போக்குவரத்து மாற்றங்களை விரைவில் மேற்கொள்ள மாநகர காவல் துறை உத்தேசித் துள்ளது. ஒரு பகுதி அவிநாசி சாலையில் காவல் ஆணையர் அலுவ லகச் சந்திப்பில் இருந்து புஷ்பா மேம்பால சந்திப்பு வரை யுள்ள பகுதி, ஒருவழிப் போக்குவரத்தாக மாற்றப்பட உள் ளது. இதன்படி புஷ்பா மேம்பால சந்திப்பிலிருந்து அவினாசி  நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் வழக்கம் போல் செல்ல லாம். அவிநாசி சாலை மற்றும் அங்கேரிப்பாளையம்  சாலையிலிருந்து புஷ்பா மேம்பால சந்திப்பு நோக்கி செல் கின்ற அனைத்து வாகனங்களும்காவல் ஆணையர் அலுவ லகச் சந்திப்பிலிருந்து கட்டாயமாக இடதுபுறம் 60 அடி சாலை யில் திரும்பி பெருமாநல்லூர்சாலையினை அடைந்து வலதுபு றம் திரும்பி புஷ்பா மேம்பால சந்திப்பு நோக்கிச் செல்லலாம். அவிநாசி சாலையில் தற்பொழுது குமார் நகர் சந்திப்பு சென்று  வலதுபுறம் திரும்பி வளையங்காடு பிரதான சாலை மற்றும்  சாமுண்டிபுரம் செல்லும் வாகனங்கள் காவல் ஆணையர் அலு வலகச் சந்திப்பிலிருந்து 60 அடி சாலை வழியாக பெருமா நல்லூர் சாலை சென்று மில்லர் சந்திப்பு, ராம்நகர் சாலை வழி யாக அவிநாசி சாலையை அடைந்து குமார்நகர் சந்திப்பில்  இடதுபுறம் திரும்பி வளையங்காடு பிரதான சாலை அடைந்து  சாமுண்டிபுரம் செல்லலாம். புஷ்பா மேம்பால சந்திப்பிலிருந்து கீரணி சந்திப்பு மற்றும்  பங்களா சந்திப்பு ஆகியவற்றின் வழியாக பெருமாநல்லூர் சாலைக்கு தற்பொழுது உள்ள நடைமுறையைப் பின்பற்றி  வாகனங்கள் செல்லலாம். இதனால் அவிநாசி சாலையில்  காவல் ஆணையர் அலுவலகச் சந்திப்பு, குமார் நகர் சந்திப்பு,  பங்களா சந்திப்பு மற்றும் கீரணி சந்திப்பு ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து சமிக்ஞைகளில் நிற்கும் நேரம் தவிர்க்கப்படும், போக்குவரத்து நெரிசலும் குறையும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் இது தொடர்பாக அவர்களது கருத்துகளை actraffict prcity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் மற்றும்  94981-81078, 94981-40792 ஆகிய கைபேசி எண்களில் கைபேசி  வாயிலாகவோ அல்லது கட்செவி (Whatsapp) மூலமாகவோ  தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி: ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருப்பூர், டிச.12- வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் மின்னணு வாக்குபதிவு  இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி அனைத்து அங் கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட  ஆட்சியர் மனிஷ் நாரணவரே தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிக ளுக்குட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணியினை பெல் நிறுவனத்திலி ருந்து 9 பொறியாளர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள். இதில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிக ளுக்கு 3528 கட்டுப்பாட்டு இயந்திம், 3810 வாக்காளர் சரி பார்க்கும் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் 2536 வாக்கு சாவடி மையங்களுக்கு தேவைப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 5565 பேலட் யூனிட், 3997  கட்டுப்பாட்டு எந்திரம், 4295 வி.வி.பேட் மின்னணு வாக்குபதிவு  இயந்திரங்கள் இருப்பறையில் உள்ளது.

பழங்கரை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி : பொதுமக்கள் போராட்டம்

அவிநாசி, டிச.12- அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு கடன் சங்கத்தில்   மோசடி செய்யப்பட்டதை கண்டித்து, வியாழக்கிழமை பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங் கத்தில், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கணக்கு வைத்துள்ளனர். இந்த சங்கத் தில் வைப்புத் தொகைக்காக, ரூ.5 லட்சத்தில்  இருந்து 40 லட்சம் வரை மொத்தம் 3.26 கோடி  ரூபாய்க்கும் மேல் செலுத்தினர். இதில், 17 க்கும் மேற்பட்டோரிடம் பெறப்பட்ட, 1.70 கோடி ரூபாயை நிர்வாகத்தினர், மோசடி செய்துள்ளதாக கூறி கடந்த ஏப்ரல் மாதத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உரிய நடவ டிக்கை எடுப்பதாக காவல் துறையினர் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில்  கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்த நபரின் சொத்து முடக்கப் பட்டு, சில தினங்களுக்கு முன்பு சொத்து  ஏலத்திற்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டது.  ஆனால் திடீரென ஏலம் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பாதிக்கபட்டவர் சங்கத்திற்கு வந்து கேட்டால், பணம் செலுத் தியதற்கான எவ்வித ஆவணமும் இல்லை என கூறியுள்ளனர். இதனால் வியாழனன்று மீண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர், கூட்டு றவு சங்க அதிகாரி பிரபாவதி உள்ளிட்டோர், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது விசா ரணை நடைபெற்று வருகிறது. விரைவில் தங்களுக்கு உண்டான தீர்வு கிடைக்கும் என  கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து  சென்றுள்ளனர்.

திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மண்டல பாசனத்திற்கு ஜனவரி மாதம் தண்ணீர் திறக்க முதல்வருக்கு கடிதம்

உடுமலை,டிச.12- திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம்  மண்டல பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர்  திறக்க அரசாணை வெளியிட வேண்டும் என  முதலாம் மண்டல பாசன விவசாயிகள் தமிழக  முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். விவசாயிகள் அனுப்பிய மனுவில் கூறியி ருப்பதாவது, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன  திட்டத்தில் கடந்த ஆண்டில் வெளியிட்ட அரசு  ஆணையின்படி கடந்த 2024 பிப்ரவரி 12 ஆம் தேதி முதலாம் மண்டலத்தில் திருப்பூர்  மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள  ஆயக்கட்டு நிலங்களுக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் இரண்டரை சுற்றுகள் (2 1/2) மட்டுமே  தண்ணீர் வழங்கப்பட்டு, ஏப்ரல் 23 ஆம் தேதி  நிறுத்தப்பட்டது. தற்போது அணையில் இருந்து  பாசனம்  பெற்று வரும் நான்காம் மண்டல காலம் இம் மாதம் 9 ஆம் தேதியுடன் முடிவு பெற வேண்டி யது, அதிகாரிகளின் தவறான நடவடிக்கை மற்றும் கால்வாய் உடைப்பு போன்ற காரணத் தால் வரும் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளதாக தெரிகிறது. நான்காம் மண்டல பாசன காலம் முடிந்தவு டன், வட்ட மலைக்கரை அணை மற்றும் பிஏபி  திட்டப்பகுதியில் உள்ள அனைத்து குளம், குட் டைகளுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும்  என முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட் டுள்ளதாகவும், அதோடு ஏற்கனவே சமீபத் தில் தண்ணீர் வழங்கிய உப்பாறு அணைக்கு மீண்டும் தண்ணீர் வழங்க வேண்டும் எனும்  கோரிக்கை வைக்கபட்டுள்ளதாகத் தெரிகி றது. இதனால்  பிஏபி விவசாய சங்கங்களின்  கோரிக்கையை ஏற்று  முதல்வர் ஒதுக்கீடு செய்த ரூ.10 கோடி ரூபாய் நிதியை பயன்ப டுத்தி பாசன கால்வாய்களை செப்பனிட்டு, முதல் மண்டலத்திற்கு உரிய காலத்தில் தண் ணீர் திறக்க இயலாத நிலையும் ஏற்படும். எனவே முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ள 10  கோடி ரூபாயை பயன்படுத்தி, பாசன கால் வாய்களை தூர் வாரி உரிய காலத்தில் முத லாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க  வேண்டும் என்று முதலாம் மண்டல பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜன.1 முதல் சாயக்கட்டணம் 20 சதவீதம் உயர்வு

திருப்பூர், டிச. 12- சாயங்கள் மற்றும் ரசாயனங்களின் விலை  உயர்ந்துள்ள தால், ஜனவரி 1 முதல் சாயமேற்ற 20 சதவீதம் கட்டண உயர்வு  நடைமுறைக்கு வர உள்ளது என சாய ஆலை உரிமையா ளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர்  காந்திராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் மாறி வரும் சூழ லில், சாய ஆலைகள் பல்வேறு காரணங்களால் பாதிப்பிற்கு  உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, மூலப்பொருட்களான சாயங்கள் மற்றும் ரசாயனங்கள் விலையும் உயர்ந்துள்ளன.  இதுபோல் பாய்லருக்கு தேவையான விறகின் விலை டன்னுக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்ந் துள்ளது. மின் கட்டணமும் ஆண்டுதோறும் உயர்ந்து வருகி றது. தொழிற்சாலைகளின் பராமரிப்பு செலவும் அதிகரித்து  வருகிறது. இதனால், உற்பத்தி செலவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை கருத்தில் கொண்டு நிர்வாகக்குழு  முடிவின்படி தற்போதுள்ள கட்டணங்களை 20 சதவீதம் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே  அனைத்து உறுப்பினர்களும் தற்போது உள்ள கட்டணத்தை வரும் 1 ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயர்த்தி பெற்றுக் கொள் ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள் ளது.

மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை

திருப்பூர், டிச.12- திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் நஞ் சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாண வர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கும் விழிப் புணர்வு நிகழ்வு பள்ளி வளாகத்தில் வியாழனன்று நடை பெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.