முந்தய பக்கம்

நார் கழிவுகளால் நிறம் மாறிய குடிநீர்

29 Dec 2025, 6:22 pm
நார் கழிவுகளால் நிறம் மாறிய குடிநீர்
<p><strong>நார் கழிவுகளால் நிறம் மாறிய குடிநீர்</strong></p> <p>ஈரோடு, டிச. 29- கஸ்தூரிபா கிராமத்தில் நார் கழிவுகளால் குடிநீர் &nbsp;மாசடைந்து நிறம் மாறியுள்ளதால் நார் கழிவு களைக் கொட்ட தடை விதிக்குமாறு ஈரோடு மாவட்ட &nbsp;ஆட்சியரிடம் திங்களன்று அப்பகுதி மக்கள் மனு &nbsp;அளித்தனர். ஈரோடு மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சிக்குட் பட்டது குட்டக்காட்டுபுதூர் மற்றும் பெரியகாடு. இங்கு 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கண பதி காயர்ஸ், வேல் காயர்ஸ், அண்ணாமலையார் காயர்ஸ் ஆகியவை முறையே நாச்சிவலசு, நாட் டார்பாளையம், ஓடாநிலை ஆகிய பகுதிகளில் செயல்படுகிறது. இவர்கள் எல்பிபி வாய்க்காலி லிருந்து தண்ணீரை எடுத்து உபயோகித்து விட்டு &nbsp;கழிவு நீரை மீண்டும் வாய்க்காலிலேயே விடுகின்ற னர். இந்த நீரால் தொங்கனத்தான் குட்டை மற்றும் &nbsp;பாசனக் கிணற்றில் நீரின் நிறம் மாறி வருகிறது. மாசு &nbsp;கலந்த நீர் பரவலால் குடிநீர் மற்றும் வேளாண் நில மும் பாதிக்கப்பட்டுள்ளது. மலட்டுத்தன்மை ஏற் பட்டு உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு &nbsp;வாழ்வும், பொருளாதாரமும் பாதிக்கப்படும் நிலை யைக் கவனத்தில் கொண்டு நார் மில் கழிவுகளை கொட்டுவதைத் தடுத்தும், ஏற்கனவே இருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்திக் கொடுக்குமாறு அதில் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram