ரயில்வே பணியிடங்களை சரண்டர் செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து டிஆர்இயு ஆர்ப்பாட்டம்
14 May 2026, 9:55 pm
<p><strong>ரயில்வே பணியிடங்களை சரண்டர் செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து டிஆர்இயு ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருச்சிராப்பள்ளி, மே 14- இந்திய ரயில்வேயில் உள்ள மொத்த காலிப் பணியிடங்களில் 29,608 பணியிடங்களை சரண்டர் செய்யும் ஒன்றிய அரசின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, டிஆர்இ.யு பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில், புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயு கோட்டத் தலைவர் லெனின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், டிஆர்இயு உதவி கோட்டச் செயலாளர்கள் உச்சிமாகாளி, செல்வம், கோட்ட உதவி தலைவர்கள் பதுருதீன், கார்த்திக், பிரான்சிஸ் சேவியர், டிஆர்இயு உதவி பொதுச் செயலாளர் மனோகர், கோட்ட உதவி தலைவர் மகேந்திரன் ஆகியோர் பேசினர். அனைத்து கிளை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், துணைத் தலைவர்கள், துணைச் செயலா ளர்கள் உள்ளிட்ட அனைத்து கமிட்டி உறுப்பினர்கள், தொழிலாளர் கலந்து கொண்டனர். ஜெனரல்-1 கிளைச் செயலாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.</p>
