ஆட்குறைப்பை கண்டித்து டிஆர்இயு ஆர்ப்பாட்டம்
19 May 2026, 10:35 pm
<p><strong>ஆட்குறைப்பை கண்டித்து டிஆர்இயு ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருச்சிராப்பள்ளி, மே 19- ஒன்றிய அரசு மற்றும் ரயில்வே வாரியம், ரயில்வே துறையில் 2 சதவிகிதம் மறு விநியோகம் மற்றும் சரண்டர் என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்தும், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தியும் டி.ஆர்.இ.யு சார்பில் திங்களன்று தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, டி.ஆர்.இ.யு உதவி கோட்ட தலைவர் ஆர். வேந்தன் தலைமை தாங்கினார். கோட்டச் செயலாளர் கரிகாலன், துணை பொதுச்செயலாளர் எஸ். ராஜா, ஜெனரல் கிளை உதவி செயலாளர் அறிவொளி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கிளை நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெனரல் கிளை உதவி செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.</p>
