முந்தய பக்கம்

ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்

16 May 2026, 1:55 am
ரயில்வேயில் காலிப்பணியிடங்களை  நிரப்பக் கோரி டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்
<p><strong>ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்</strong></p><p>ராணிப்பேட்டை, மே 15- ஒன்றிய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து, டிஆர்இயூ ஒர்க் ஷாப் டிவிஷன் தொழிலாளர்கள் சார்பில், இடபுள்யூஎஸ் பணிமனை முன்பு கிளைச் செயலாளர் ஆர். பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஊழியர்களின் எண்ணிக்கை 16.5 லட்சத்திலிருந்து 12.29 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று ஆர்ப்பாட் டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், 29,608 பதவிகளை ரத்து செய்யும் உத்தரவை உடனே திரும்பப் பெறவும், வேலைப்பளுவைக் குறைக்கக் காலிப்பணி யிடங்களை விரைந்து நிரப்பவும் வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் டிஆர்இயூ பொதுச் செயலாளர் பேபி சகிலா சிறப்பு ரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஏபிஎம். சீனிவாசன், டிவிஷன் உதவி தலைவர் டி.வி. சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தொழிற்சங்க நிர்வாகிகள் சுதான்சு குமார், அஸ்வின், வெங்கடேசன், நித்யா கண்ணன், சதீஷ்குமார், விஜயன், ராமமூர்த்தி உள்ளிட்ட திரளான தொழி லாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் நிறைவாக, எம்.எஸ்.மனு நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram