பாரபட்சத்தை கண்டித்து பொன்னேரியில் டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்
21 Jun 2026, 1:38 am

பாரபட்சத்தை கண்டித்து பொன்னேரியில் டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூன் 20-

தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் பாரபட்ச போக்கைக் கண்டித்தும், ஊழியர்களின் அடிப்படை வசதிகளை வலியுறுத்தியும் பொன்னேரி ரயில் நிலையத்தில் தக்ஷின் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், எஸ்ஆர்எம்யூ சங்கத்திற்கு இணையாக வாக்குகள் பெற்றும் டிஆர்இயூ சங்கத்திற்கு 70 கிளைகள் மட்டுமே வழங்கி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. எஸ்ஆர்எம்யூ-க்கு இணையாக 170 கிளைகளை அனுமதிக்க வேண்டும், ரயில்வே கடவுப்பாதை ஊழியர்களுக்குக் குடிநீர், கழிப்பறை வசதிகளை உருவாக்க வேண்டும் மற்றும் பணியிட மாறுதல் குளறுபடிகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.