தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கீமேன், ரோந்து பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்து காலிப்பணியிடங்களை நிரப்புக! மதுரையில் டிஆர்இயு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

2 hours before
கீமேன், ரோந்து பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்து காலிப்பணியிடங்களை நிரப்புக! மதுரையில் டிஆர்இயு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கீமேன், ரோந்து பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்து காலிப்பணியிடங்களை நிரப்புக!

மதுரையில் டிஆர்இயு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக. 21-மதுரை கோட்ட ரயில்வே பொறி யியல் துணைக் குழு சார்பில் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் முன்பு வெள்ளிக்கிழமை மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயு (தட்சிண ரயில்வே தொழிலாளர் சங்கம்) கோட்ட உதவித் தலைவர் எம்.ஜெயராஜசேகர் தலைமை வகித்தார். மத்திய சங்க உதவித் தலைவர் ஆர். திருமலை ஐயப்பன், மத்திய சங்க உதவிப் பொதுச்செயலாளர் எம். சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரப்பாட்டத்தில் கீமேன், ரோந்து பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் ; கீமேன், பேட்ரோல்மேன் தொழிலாளர்களுக்கு உலக ளாவிய நிலை கண்டறியும் அமைப்பு (ஜிபிஎஸ்) கருவியைகட்டாயப்படுத்திவழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்; 15 கிலோமீட்டர் வரை நடந்து பணியாற்றும் கீமேன்களின் பணிப்பாதையையும், 20 கிலோமீட்டர் வரை நடந்து பணியாற்றும் இரவு ரோந்து பணியாளர்களின் பணிப்பாதையையும் குறைக்க வேண்டும் ; டிராக் பராமரிப்பா ளர்களுக்கு அதே பதவியில் 4,200 தர ஊதியம் வழங்க வேண்டும் ; வனவிலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளபுனலூர், செங்கோட்டை பகுதிகளில் ஆபத்தான சூழ்நிலையில் தொழிலா ளர்களை இரவு ரோந்து பணிக்கு அனுப்புவதை கைவிட்டு, நவீன ரோந்து வாக னங்களை பயன்படுத்த வேண்டும் ; காலியாக உள்ள பிளாக்மீஸ்த், ஆர்டிசான்,வெல்டர், எஸ்டிஎம் மேன் தொழிலாளர்களுக்கு , எஸ்டிஎம் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ; பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை கைவிடவேண்டும்; அனைத்து எல்சி கேட்களிலும் 8 மணி நேர வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும் ; பாதுகாப்புக் காலணி, கையுறைகள், பிரதிபலிப்புமேலங்கி, மழைக்கோட்டு, கருவிப் பை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை காலதாமதமின்றி வழங்கவேண்டும்; பழனி சம்பவத்தில் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்; பழனியில் மொத்த உடல்நலக் குறைவுவிடுப்பு எடுத்த இருப்புப் பாதை பராமரிப்பாள ர்கள் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், ரயில்வே விதிகளுக்கு புறம்பாக பல ஆண்டுகளாக வெவ்வேறு வெளிப்புற பணிக்குழுக்களில் பணியாற்றி வரும் சுமார் 15 பேரை, அந்தந்தபகுதிகளில் பணிச்சுமையை அதிகரிக்கும் வகையில் வேறு அலுவலகங்களில் பணியில் ஈடுபடுத்தியிருப்பதாகவும், இதனால் ரயில்வேக்கு வருவாய்இழப்பு ஏற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் நம்பிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில்கோட்டச்செயலாளர் என். கார்த்திக் சங்கிலி, கோட்டத் தலைவர் பி. வினோத் பாபு,

கோட்ட உதவித் தலைவர் கே. குமார்,டிஜி கிளைச் செயலாளர் சி. இம்மானுவேல் ஆரோக்கியசாமி, ஆர்எம்எம் கிளைச் செயலாளர் என். செல்லத்துரை,எஸ்சிடி கிளைச் செயலாளர் கே. உன்னிகிருஷ்ணன், மதுரை ஓபன் லைன் கிளை உதவிச் செயலாளர் டி. ஸ்ரீனிவாசன், டிஆர்பியு கோட்டச் செயலாளர்ஆர்.சங்கரநாராயணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மதுரை ஓபன் லைன் கிளைச் செயலாளர் பி. சேதுக்கரை நன்றி கூறினார்.குறிப்பாக, தொழிலாளர்களின் பாதுகாப்பு, பணிச்சுமை குறைப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.