தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக! டிஆர்இயு மதுரை கோட்ட பொதுமகா சபை கோரிக்கை

24 Jul 2026, 9:34 pm
ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக! டிஆர்இயு மதுரை கோட்ட பொதுமகா சபை கோரிக்கை

ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக! டிஆர்இயு மதுரை கோட்ட பொதுமகா சபை கோரிக்கை

மதுரை, ஜூலை 24 - தட்சிண ரயில்வே தொழிலாளர் சங்கம் (டிஆர்இயு) மதுரை கோட்டத்தின் 18-வது பொது மகா சபை கூட்டம் வெள்ளிக்கிழமை மதுரை ரயில்வே மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டத் தலைவர் கே. ராஜா தலைமை வகித்தார்.

கோட்டச் செயலாளர் எம். சிவக்குமார் மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் என். கார்த்திக் சங்கிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய சங்கத் தலை வர் ஜி. சுகுமாறன் துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

தென்னக ரயில்வே ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. எம். பேபி ஷகிலா, மத்திய சங்க செயல் தலைவர் ஏ. ஜானகிராமன், சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. லெனின், மத்திய சங்க உதவித் தலைவர் ஆர். திருமலை அய்யப்பன் ஆகியோர் உரையாற்றினர்.

மதுரை கோட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ரயில்வே ஊழியர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் பொதுமகா சபை கூட்டத்தில் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அங்கீகாரச் சங்க உரிமைகள் முழுமையாக வழங்க வேண்டும். 12.12.2024 முதல் அங்கீகாரச் சங்கமாக டிஆர்இயு செயல்பட்டு வந்தாலும், அதற்குரிய உரிமைகள் முழுமையாக வழங்கப்படவில்லை. மாற்றுச் சங்கத்திற்கு 170 கிளைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், டிஆர்இயுவுக்கு 70 கிளைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், நிரந்தர பேச்சுவார்த்தை அமைப்பு, மத்திய சங்க அலுவலகம், கோட்டச் சங்க அலுவலகங்கள் உள்ளிட்ட அங்கீகாரச் சங்கத்திற்குரிய அனைத்து சலுகைகளையும் ரயில்வே நிர்வாகம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதுகுறித்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் குரல் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

டிஆர்இயுவின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை மதுரை ரயில்வே நிர்வாகம் நீண்டகாலமாக நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக பெட்டி மற்றும் வேகன் பராமரிப்புப் பிரிவை சேர்ந்த டிஆர்இயு பொறுப்பாளர் காளிதாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மூத்த கோட்ட இயந்திரப் பொறியாளர் மற்றும் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பாமல் காலதாமதப்படுத்துவது கண்டனத்துக்குரியது .

பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.