டிஆர்இயு நிர்வாகிகள் தேர்வு
31 Oct 2026, 12:05 am

டிஆர்இயு நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு, அக்.30-டிஆர்இயு ஈரோடு இஎல்எஸ் (எலக்ட்ரிக் லோகோசெட்) கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.ஈரோடு- காளைமாட்டு வீரன்சிலை அருகே தனியார் ஓட்டலில் வியாழனன்று மாலை நடைபெற்ற நிகழ்விற்கு, பி.யுவராஜ் தலைமை வகித்தார். சேலம் கோட்டச் செயலாளர் எம்.முருகேசன், மண்டல இணைச்செயலாளர் கே.பிஜூ, ஓய்வூதியர் சங்க நிர்வாகி சி.முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக டி.கே.பினுமோன், செயலாளராக பி.யுவராஜ், பொருளாளராகஏ.கார்த்திகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத்தலைவர்களாக ஆர்.ராஜ்கமல், ஏ.அஜீஸ், டி.சரத், ஆர்.குருசந்திரன் ஆகியோரும், இணைச்செயலாளர்களாக எஸ்.சக்திவேல், எஸ்.சங்கமித்ரன், என்.பிரேமதாசன், சி.பிரதீப், ஜிதேந்திர குமார்மீனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக, எஸ்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.