கனவு காண்பவர்கள், கனவுடனேயே மண்ணுக்குள் புதைக்கப்படுவார்கள் ஈரான் ஒருபோதும் சரணடையாது!
7 Mar 2026, 2:36 pm

கனவு காண்பவர்கள், கனவுடனேயே மண்ணுக்குள் புதைக்கப்படுவார்கள் ஈரான் ஒருபோதும் சரணடையாது!

டிரம்ப்புக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி

டெஹ்ரான், மார்ச் 7 - ஏகாதிபத்திய அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள போர் ஒரு வாரத்தை கடந்துள்ள நிலை யில், ஈரான் நிபந்தனையற்ற முறை யில் சரணடைய வேண்டும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால், “ஒரு போதும் அது நடக்காது” என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் வெள்ளிக் கிழமை வெளியிட்ட பதிவில், “நிபந்த னையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இருக்காது” என்று தெரிவித்தார். அப்படி நிபந்தனையின்றி அவர்கள் சரணடைந்த பிறகு, அந்நாட்டுக்கு அமெரிக்காவே ஒரு தலைவரை தெரிவு செய்யும். அதன்பிறகு , அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என்றும் அவர் கூறியிருந்தார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலும் நிபந்தனையின்றி சரணடைவதற்கு ஈரானிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் தேவையில்லை என்றும் ஆண வத்துடன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமையன்று பேசிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடையும் என கனவு காண்பவர்கள், “அந்தக் கனவுடனே யே மண்ணுக்குள் புதைக்கப்படு வார்கள்” என மிக கடுமையாக அமெ ரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்தப்ப டாமல் இருந்தால் ஈரானின் அண்டை நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கா வின் ராணுவத்தளங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தாது. இதற்கு ஈரானின் தற்போதைய முக்கிய தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எங்கள் பிராந்திய நாடுகளுடன் ஈரானுக்கு எந்தப் பகையும் இல்லை என்றும் கூறியிருக்கும் அவர், தாக்குதலுக்காக அண்டை நாடுகளிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.