கோவையில் திராவிட வாழ்வியல் விழா
18 Nov 2025, 3:21 pm

கோவையில் திராவிட வாழ்வியல் விழா

கோவை, நவ.18- கோவையில் நடைபெற்ற திராவிட வாழ்வியல் விழா வில், அம்பேத்கர் இயற்றி, தாயப்பன் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்ட “சாதியை ஒழிக்கும் வழி” என்ற நூல் வெளி யிடப்பட்டது. திராவிடர் தளம் - திராவிடர் மாணவர் கூட்டமைப்பு சார் பில், கோவையில் திராவிடர் வாழ்வியல் விழா 2025 ஞாயி றன்று நடைபெற்றது. இவ்விழாவில் கடவுள் மறுப்பு உறுதி மொழி, திராவிடர் வாழ்வியல் உறுதிமொழிகள் வாசிக்கப் பட்டன. தொடர்ந்து, தங்களது இறப்பில் கூட சாதி, மதச் சடங்குகள் எதையும், யாரும் செய்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தி, “மரண சாசனம்” வெளியிடப்பட்டது. காலை அமர்வில், அம்பேத்கர் இயற்றி, தாயப்பன் மொழி பெயர்த்து, தலித் முரசு வெளியீடாக வந்துள்ள “ஜாதியை ஒழிக்கும் வழி” நூல் வெளியிடப்பட்டது. பெரியார் மையத் தோழர் பழனி க.பால்ராஜ் வெளியிட்ட, திமுக மகளிரணியின் ஈரோடு மாநகர அமைப்பாளர் அனிச்சம் கனிமொழி பெற்றுக் கொண்டார். இதையடுத்து நடைபெற்ற கருத்தரங்கில், 12 உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றி னர். மாலை அமர்வில், திராவிடர் வாழ்வியல் மலர் வெளியி டப்பட்டது. திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., வெளியிட, தலித் முரசு ஆசிரியர் புனிதப் பாண்டியன், திமுக மாநில மாணவரணிச் செயலாளர் ராஜீவ்காந்தி பெற் றுக்கொண்டனர்.