தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரூரில் 9 ஹெக்டேர் பரப்பளவில் டிராகன் ஃப்ரூட் சாகுபடி

1 Feb 2026, 3:51 pm
கரூரில் 9 ஹெக்டேர் பரப்பளவில் டிராகன் ஃப்ரூட் சாகுபடி
<p><strong>கரூரில் 9 ஹெக்டேர் பரப்பளவில் டிராகன் ஃப்ரூட் சாகுபடி</strong></p> <p>மாவட்ட ஆட்சியர் தகவல் கரூர், பிப்.1 - கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் இரணியமங்கலத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக விவசாயிகள் மானியம் பெற்று கமலம் பழம் (டிராகன் ஃப்ரூட்) சாகுபடி செய்து வருவதை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் செய்தியாளர்கள் பயணத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களி டம் தெரிவிக்கையில், &ldquo;தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் &nbsp;திட்டத்தின்கீழ் விவசாயிகள் மானியம் பெற்று டிராகன் ஃப்ரூட் சாகுபடி செய்யப் பட்டு வருவது ஆய்வு செய்யப்பட்டது. இப்பயிர் சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 96,000 மானியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் 2025-26 ஆம் நிதி யாண்டு முதல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1. 62 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கள்ளிச்செடி குடும்பத் தைச் சேர்ந்த டிராகன் ஃப்ரூட் குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் தரும் பயிராக உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள காலநிலை இச்சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. &nbsp;இந்தச் செடி ஒரு கொடி வகை என்ப தால், படருவதற்குத் தாங்கு தூண்கள் அவசியம். நுண்ணீர் பாசனம் சிறந்தது. நடப்பட்ட 12 முதல் 15 மாதங்களில் பலன் &nbsp;தரத் தொடங்கும். மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை பூக்கும். ஒரு செடி சுமார் &nbsp;20 முதல் 25 ஆண்டுகள் வரை பலன் தரும். ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு சராசரி யாக 4 முதல் 5 டன் வரை மகசூல் எதிர்பார்க்கலாம். ​பொதுவாக இதில் பூச்சித் தாக்குதல் குறைவு. இருப்பினும் எறும்புகள் மற்றும் &nbsp;நத்தைகளைக் கண்காணிக்க வேண்டும். &nbsp;டிராகன் ஃப்ரூட்டில் சிவப்பு மற்றும் வெள்ளை என இரண்டு முக்கிய வகைகள் &nbsp;உள்ளன. சந்தையில் சிவப்பிற்கு அதிக வரவேற்பு உள்ளது. அதனடிப்படையில் கரூர் மாவட்டத் தில் 2023 முதல் டிசம்பர் 2025 ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகளில் 9 ஹெக் டேர் பரப்பளவில் தோகைமலை, குளித் தலை, அரவக்குறிச்சி மற்றும் கடவூர் வட்டாரங்களில் 2023-24 நிதியாண்டில் 4 &nbsp;விவசாயிகளுக்கு ரூ.3.84 லட்சம் மானிய மாகவும், 2025-26 நிதியாண்டில் 2 விவ சாயிகளுக்கு ரூ.1.62 லட்சம் மானியமாக வும் என மொத்தம் 6 விவசாயிகளுக்கு ரூ. 5.46 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது&rdquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.