தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உழைக்கும் மக்களின் சேமிப்புகளை காக்க தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு டாக்டர் விஜூ கிருஷ்ணன் கோரிக்கை

15 Feb 2026, 3:03 pm
உழைக்கும் மக்களின் சேமிப்புகளை காக்க தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு டாக்டர் விஜூ கிருஷ்ணன் கோரிக்கை
<p><strong>உழைக்கும் மக்களின் சேமிப்புகளை காக்க தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு டாக்டர் விஜூ கிருஷ்ணன் கோரிக்கை</strong></p> <p>சென்னை, &nbsp;பிப். 16 - உழைக்கும் மக்களின் சேமிப்பை பாது காக்கவும், மாநில உரிமையை நிலை நாட்டவும் &lsquo;தமிழ்நாடு வங்கி&rsquo; உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் &nbsp;சனிக்கிழமையன்று (பிப்.14) சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: சமமான போட்டியா? இந்திய விவசாயிகளை காவு கொடுக்கும் வகையில் ஒன்றிய அரசு அமெரிக்காவுடன் வர்த்தக்க உடன்பாடு செய்துள்ளது, இதனால் இந்திய விவசாயம் அழியும் நிலை &nbsp;உருவாகும். இந்தியாவிலிருந்து அமெரிக்கா விற்கு வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்தால் 18 சதவீத வரி. அமெரிக்காவி லிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தால் வரி இல்லை. இது ஒப்பந்தம் எப்படி சமமான போட்டியை உருவாக்கும்? 2016ஆம் ஆண்டு தரவுகளின்படி, அமெரிக்க அரசு தனது நாட்டு விவசாயி ஒருவ ருக்கு ஆண்டுக்கு சராசரியாக 62ஆயிரம் டாலர் மானியம் கொடுத்தது. ஆனால், இந்திய விவசாயிக்கு 2018ல் ஒரு விவசாயிக்கு 282 டாலர் மட்டுமே வழங்கப்பட்டது. அமெரிக்கா வில் ஒரு விவசாயிக்கு சராசரி நில அளவு 463 ஏக்கர். 60 சதவீத விவசாயிகள் 2ஆயிரம் ஏக்க ருக்கு மேல் நிலம் வைத்துள்ளனர். இந்தியா வில் 86 சதவீத விவசாயிகள் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கிறார்கள். இது சமமான போட்டியா? 10 லட்சம் பேர் பலி கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் இந்தியா வில் 1.50 லட்சம் விவசாயிகளும், 3.50 லட்சம் தினக்கூலித் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 12 மாநிலங் களில் இருந்து கிடைத்த தகவல்தான். ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 10 லட்சம் உழைக்கும் மக்கள் உயிரிழந்திருப்பார்கள். கேரள வங்கி உழைக்கும் மக்களின் சேமிப்பை அவர் களுக்கே திருப்பித் தரும் வகையில் கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரள வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்யும் ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக இது உள்ளது. நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கி அதற்கு அமித்ஷாவை அமைச்சராக்கி உள்ளது. &nbsp;மாநிலப்பட்டியலில் உள்ள கூட்டுறவுத்துறை ஒன்றிய அரசு பறிக்க முயற்சித்து வருகிறது. கடும் விதிமுறைகள், பல தடைகளை, சட்டப் போராட்டங்களை தாண்டி &lsquo;கேரள வங்கி&rsquo; உருவாக்கப்பட்டது. இது வெறும் நிர்வாக முடிவு அல்ல; அரசியல் உறுதியின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு. தமிழ்நாட்டிற்கான அறைகூவல் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில &nbsp;தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கினால், மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சிறு-குறு தொழில்களுக்கும் ஒரு மிகப்பெரிய நிதியாதாரமாக அது விளங்கும். &nbsp;மேலும் ஒன்றிய அரசின் பொரு ளாதார தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவியாக இருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர், இடதுசாரி அமைப்புகளின் ஆதரவோடு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்க வேண்டும். கார்ப்பரேட் கொள்ளைக்குப் பலியாகும் நமது வங்கித் துறையையும், கூட்டுறவு அமைப்புகளையும் மீட்டெடுக்க தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.