முந்தய பக்கம்

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

1 Jan 2026, 4:52 pm
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர்  விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
<p><strong>நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் &nbsp;விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்</strong></p> <p>அரியலூர், ஜன.1 - &nbsp;ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகர்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உப கரணங்களை வழங்கினார். இதன் காணொலி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா அரங்கில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, இளை ஞர்களுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர், மாவட்டத்திலுள்ள 2 நகராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளிலுள்ள 69 வார்டுகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகர ணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், 30 விளை யாட்டு உபகரணங்கள் அடங்கிய 108 தொகுப்புகளை விநியோகம் செய்யவுள்ள வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். &nbsp;நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பி னர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண் டம் க.சொ.க.கண்ணன், அரியலூர் வரு வாய் கோட்டாட்சியர் பிரேமி, வட்டாட்சியர் முத்துலட்சுமி, அரசு மருத்துவக் கல்லூரி &nbsp;மருத்துவமனை முதன்மையர் முத்து கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram