டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி பட்டமளிப்பு விழா
20 Jul 2026, 10:03 pm
<p><strong>டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி பட்டமளிப்பு விழா</strong> </p><p>சிவகங்கை, ஜூலை 20- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அகமது ஜலாலுதீன் தலைமை வகித்தார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜப ருல்லாகான் வாழ்த்துரை வழங்கினார். கல்வி மேம்பாட்டு குழு தலைவர் இஸ்மாயில் முஹைதீன், 1031 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹமது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நஷீர்கான், அஸ்ரப் அலி, அப்துல் சலீம், சிராஜுதீன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் சபினுல்லாகான், பேராசிரியர்கள், அலுவ லர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.</p>
