தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

19 May 2026, 9:14 pm
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில்  9 பேரின் விடுதலை ரத்து  ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மே 19 - சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், குற்ற வாளிகள் 9 பேரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதி மன்றம் ரத்து செய்து, அனைவருக் கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் வசித்து வந்தார்.

அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறில், 2013 செப்டம்பர் 14 ஆம் தேதி சாலை யோரம் நடந்து சென்ற அவர் கூலிப் படையினரால் கொடூரமாக வெட்டப் பட்டு, செப்டம்பர் 23 ஆம் தேதி உயி ரிழந்தார்.

2021 ஆம் ஆண்டு சென்னை முத லாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், பொன்னுசாமி உட்பட 7 பேருக்கு மரண தண்டனையும், மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகிய 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்தது.

எனினும், 2024 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்தது.

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்ததை விசா ரித்த நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர், பட்டப் பகலில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் ஒரு மருத்துவர் கொடூர மாகக் கொல்லப்பட்ட வழக்கில் சிசிடிவி ஆதாரங்களை ஆராயாமல் விடுதலை வழங்கியது மிகப்பெரிய தவறு என்று உயர் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தனர்.

முதன்மைக் குற்றவாளிகளான பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோர் வயது முதிர்ந்தவர்கள் என்பதால், தண்டனைக் குறைப்பு கோரி ஆளுநரிடம் மனு தாக்கல் செய்யலாம் என்றும், ஆளுநர் முடிவு வரும்வரை இவ்விருவரின் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மற்ற குற்றவாளிகள் உடனடியாக காவல் துறையிடம் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.