டாக்டர் எம். ராஜா கிளைமாக்ஸின் புதிய வடிவியல் தேற்றங்கள் குறித்து சர்வதேச இணைய கருத்தரங்கம்
26 Jun 2026, 10:58 pm
<p><strong>டாக்டர் எம். ராஜா கிளைமாக்ஸின் புதிய வடிவியல் தேற்றங்கள் குறித்து சர்வதேச இணைய கருத்தரங்கம்</strong></p><p>மதுரை, ஜூன் 25- இந்தியாவின் புகழ்பெற்ற கணிதவிய லாளரும், ஆய்வாளரும், சிஇஓஏ (CEOA) கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவ ருமான டாக்டர் எம். ராஜா கிளைமாக்ஸ் கண்டுபிடித்துள்ள 58-க்கும் மேற்பட்ட புதிய வடிவியல் தேற்றங்கள் குறித்த சர்வதேச இணையவழி கருத்தரங்கம் ஜூன் 24 அன்று நடைபெற்றது. இந்தியா மற்றும் லிபியா நாடுக ளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லிபி யாவின் வாடி அல்ஷட்டி பல்கலைக்கழகம் , கார்யான் பல்கலைக்கழகம் , நாலுட் பல்க லைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்க ளின் சர்வதேச ஒத்துழைப்பு அலுவலகங்க ளும், இந்தியாவின் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் காரியாபட்டி சிஇஓஏ கலை- அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறு வனங்களும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின. சர்வதேச ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ஆர். ரவீந்திரநாத் நேரு அறிமுக உரையாற்றினார். லிபியாவின் நலூட் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் நஜி எல்ஹாடி அபோரஸ் வாழ்த்திப் பேசினார். லிபிய நாட்டு கார்யான் பல்க லைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் அப்துல்அஜீஸ் அபோடினா சிறப்புரை யாற்றினார். டாக்டர் எம். ராஜா கிளைமாக் கருத்துரை யாற்றினார். ஆற்றினார். அப்போது தாம் கண்டுபிடித்துள்ள 12 புள்ளிகள் வட்டத் தேற்றம் என்ற புதிய வடிவியல் தேற் றத்தினை உலக கல்வியாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அறிமுகப் டுத்தினார். இந்த சர்வதேச இணையவழி கருத்த ரங்கில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியா ளர்கள், கணித ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். </p>
