முந்தய பக்கம்

52 வயதில் எவரெஸ்ட் சிகரம் தொட்ட மருத்துவர் பிரியா

11 Jun 2026, 12:24 am
52 வயதில் எவரெஸ்ட் சிகரம் தொட்ட மருத்துவர் பிரியா
<p><strong>52 வயதில் எவரெஸ்ட் சிகரம் தொட்ட மருத்துவர் பிரியா</strong> </p><p>சென்னை, ஜூன் 10- மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தியும், சென்னையின் பிரபல மருத்துவமனையின் இயக்கு நருமான மூத்த கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரியா செல்வராஜ், தனது 52-ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். 7 மாதங்களில் 8,000 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு சிகரங்களை ஏறிய 50 வயதுக்கு மேற்பட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார். 2021-இல் மலையேற வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியதிலிருந்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி எடுத்தார். வீட்டின் மாடிப்படிகள், மருத்துவமனை படிக்கட்டுகள், மேம்பாலங்கள் என அன்றாட சூழலிலேயே உடலை தயார்படுத்தினார். 45 நாட்கள் மலை ஏறும் முறை யான பயிற்சிக்கு பின்னர் வெறும் 8 நாட்களில் அவர் சிகரத்தை எட்டியுள்ளார். 6 பெண்களும் 6 ஆண்களும் அடங்கிய குழுவுடன் பயணம் தொடங்கிய பிரியா, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்களை தாண்டி சிகரத்தை எட்டினார். திரும்பும் வழியில் தடுக்கி விழுந்தாலும், பாதுகாப்பு ரோப்பின் துணையால் உயிர் தப்பினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram