அவிநாசியின் அரசியல் முகத்தை மாற்றும் மருத்துவர் கோகிலா மணி!
8 Apr 2026, 5:30 am

அவிநாசியின் அரசியல் முகத்தை மாற்றும் மருத்துவர் கோகிலா மணி!

திருப்பூர், ஏப்.7: அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மருத்துவர் கோகிலா மணி, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் மருத்துவர் கோகிலா மணி போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், அவிநாசி தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைந்து முடிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.