அவினாசியின் அரசியல் முகத்தை மாற்றும் மருத்துவர் கோகிலா மணி!
8 Apr 2026, 5:30 am

அவினாசியின் அரசியல் முகத்தை மாற்றும் மருத்துவர் கோகிலா மணி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், மேற்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியான அவினாசி (தனி), இந்த முறை மாநிலத்தின் கவனத்தை ஈர்க்கும் ஒரு தொகுதியாக மாறியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இந்த மண்ணில், திமுக சார்பில் முதல் முறையாக ஒரு பெண் வேட்பாளர் களமிறங்கியிருப்பதுதான்.

மருத்துவர் கோகிலா மணி, அவினாசி தொகுதியின் அரசியல் போக்கையே மாற்றிக் கொண்டிருக்கிறார். எளிய பின்னணி, அசாத்திய துணிச்சல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அவினாசியில் ஒரு புதிய அரசியலை விதைத்துள்ளது. 20 ஆண்டுகாலமாக அதிமுகவின் பிடியில் இருந்த இந்தத் தொகுதி, இப்போது மாற்றத்தை விரும்புகிறது.

சமூகத்தை நேசிக்கும் விளிம்பு நிலைத் தொழிலாளியின் மகளான இவர், முன்னால் முதல்வர் கருணாநிதியின் உதவியால் உயர்கல்வி பயின்று மருத்துவரானவர். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனிநபர் மருத்துவ முகாம்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வந்துள்ளார். மருத்துவர் கோகிலா மணி, தேர்தலை வெறும் வாக்குகளாகப் பார்க்காமல், மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுகிறார்.

அதிமுகவின் அதிகார ஆசையா? தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அதிமுகவின் சார்பில் ப.தனபால் இந்த முறை களமிறங்கியுள்ளார். இவர் ஏற்கனவே சபாநாயகராக இருந்தவர். ஆனால், தொகுதிக்கு அவர் செய்த நன்மைகள் என்ன? என்ற கேள்வி எழுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நலிவடைந்துள்ளன.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள், குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், சிலிண்டர் மானியம், கல்விக்கடன் ரத்து போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மருத்துவர் கோகிலா மணி, இந்த வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமும், அவர்களின் குறைகளைத் தீர்க்கும் உறுதியும் அவரை ஒரு நம்பிக்கைக்குரிய வேட்பாளராக மாற்றியுள்ளது.