டாக்டர் வந்தனா தாஸ் கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்ட சந்தீப்பிற்கு ஆயுள் தண்டனை
21 Mar 2026, 2:42 pm
<p><strong>டாக்டர் வந்தனா தாஸ் கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்ட சந்தீப்பிற்கு ஆயுள் தண்டனை</strong></p>
<p>கேரள மாநிலம் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி சிகிச்சையில் இருந்த சந்தீப், பயிற்சி மருத்துவர் வந்தனா தாஸை குத்திக் கொன்றார். நெடும்பனா நடு நிலைப் பள்ளியின் ஆசிரியரான எஸ். சந்தீப், அவசர சிகிச்சைப் பிரிவு அறையிலிருந்த கத்தரிக்கோலால் வந்தனா தாஸை குத்தினார். கொலையாளியை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர் மணிலால், பூயப்பள்ளி காவல் நிலையத்தின் ஊர்க்காவலர் அலெக்ஸ்குட்டி, சந்தீப்பின் அண்டை வீட்டுக்காரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓடனவட்டம் பஞ்சாயத்து உறுப்பினருமான பினு ஆகியோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வந்தனா தாஸ் கொட்டாரக்கரை தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் திரு வனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் சனியன்று வழங்கியது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப்பிற்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அப ராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வந்தனா தாஸ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையானது, பிரிவுகள் 323, 324, 332 மற்றும் 333-இன் கீழ் அனுபவிக்க வேண்டிய முதல் 30 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு தொடங்கும். அதாவது ஆயுள் தண்டனையுடன், பிற குற்றங்களுக்காக 30 ஆண்டு சிறைத் தண்டனையும் சேர்த்து, அவை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் என நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனை போதுமானதல்ல என்று கூறி, அரசுத் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக வழக்க றிஞர் தெரிவித்தார்.</p>
