தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எளிய மக்களின் சட்டப் போராளி டாக்டர் நிர்மலா ராணி

5 Apr 2026, 3:36 pm
எளிய மக்களின் சட்டப் போராளி டாக்டர் நிர்மலா ராணி
<p><strong>எளிய மக்களின் சட்டப் போராளி டாக்டர் நிர்மலா ராணி</strong></p> <p>சென்னை, ஏப்.5 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் &nbsp;சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பின ரும், மகளிர் சட்ட உதவி மன்றத் தலைவரு மான மறைந்த டாக்டர் உ.நிர்மலா ராணி &nbsp;நினைவேந்தல் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை (ஏப்.4) நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் &nbsp;சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிர மிளா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் இடதுசாரி இயக்கத் தலைவர்கள் &nbsp;பங்கேற்றுப் புகழஞ்சலி செலுத்தினர். வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் போராட்டங்கள் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, &ldquo;தோழர் நிர்மலா ராணி நடத்திய மூன்று முக்கிய வழக்கு கள் தமிழகத்தின் இடதுசாரி இயக்க வர லாற்றில் அழியாத தடம் பதித்தவை. மதுரையில் நான் நீதிபதியாக இருந்த போது, உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தொடர்பான வழக்கு என் முன் வந்தது. அந்தச் சுவர் இடிக்கப்பட்ட பிறகு, &lsquo;சுவர் மனிதர்களைப் பிரிக்கலாம், ஆனால் மனங்களைப் பிரிக்க முடியாது&rsquo; என்று தீர்ப்பளித்தேன். அந்தச் சுவரின் உடைந்த &nbsp;செங்கல் இன்றும் எனது மேஜையில் ஒரு &nbsp;நினைவூட்டலாக இருந்து வருகிறது. இந்த வழக்கில் காவல் அதிகாரி அஸ்ரா &nbsp;கார்க் ஐபிஎஸ் ஆற்றிய பங்கும் குறிப்பிடத் தக்கது. அதேபோல், பொதும்பு கிராமத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகப் போராடி, குற்ற வாளிக்கு 56 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத் தந்தது தமிழக போக்சோ சட்ட வரலாற்றில் மிக முக்கிய மானது. மேலும், உசிலம்பட்டி விமலா தேவி ஆணவக் கொலை வழக்கில் அவர் &nbsp;எடுத்த சட்ட முயற்சிகளே, இன்று தமிழக &nbsp;அரசு ஆணவக் கொலைகளைத் தடுக்கப் &nbsp;பின்பற்றும் வழிகாட்டுதல்களுக்கு அடிப் படையாக அமைந்தது. அறிவார்ந்த ஆளுமை நீதிமன்றப் பணிகளோடு நில்லா மல், &lsquo;பேஸ்லெஸ் அண்ட் வாய்ஸ்லெஸ்&rsquo; என்ற ஆய்வு நூலை எழுதி முனைவர் பட்டமும் பெற்றார். 1980-களில் தோழர் மைதிலி சிவராமன் இல்லத்தில் சிறுமி யாக நான் சந்தித்த &lsquo;நிம்மி&rsquo;, பின்னா ளில் எளிய மக்களின் குரலாக டாக்டர் நிர்மலா ராணியாக உயர்ந்தார். ஒரு வழக் கறிஞராகத் தன்னைத் தொடர்ந்து மெரு கேற்றிக் கொண்ட அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். &nbsp;இவ்வாறு நீதிபதி கே.சந்துரு உரை யாற்றினார். பெண்கள்-ஒடுக்கப்பட்டோரின் பாதுகாப்பு அரண் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.என்.மஞ் சுளா பேசுகையில், &ldquo;பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல் லைகள் குறித்து நிர்மலா ராணி திரட்டி அளித்த விரிவான ஆய்வுக் குறிப்புகள், இன்று இத்துறையில் தமிழகம், இந்தி யாவுக்கே முன்னோடியாகத் திகழக் காரணமாக அமைந்தது&rdquo; என்றார். &nbsp;தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 இருளர் குடும்பங்களைக் கொத்தடிமை முறையிலிருந்து மீட்டு அவர்களுக்கு வீடுகள் பெற்றுத் தந்ததில் நிர்மலா ராணியின் நேரடி களப்பணியைப் பாராட்டினார். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு உரிமையை நிலைநாட்ட நீதி மன்றத்தில் அவர் ஆற்றிய வாதத் திற மையையும் அவர் சுட்டிக்காட்டினார். ஈடு செய்ய முடியாத இழப்பு சிஐடியு அகில இந்திய செயலாளர் அ.கருமலையான், நிர்மலா ராணியின் &nbsp;அறிவுப்பூர்வமான கம்யூனிசப் பார்வை யையும் தோழர் உமாநாத் குடும்பத்தின் தியாகப் பின்னணியையும் விவரித்தார். மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கப் பொதுச் செய லாளர் பி.ஜான்சிராணி ஆகியோர் கூறு கையில், பாதிக்கப்பட்ட பெண்கள் எப்போது வேண்டுமானாலும் அணுகக் கூடிய எளிய தலைவராகவும், இயக்கப் பணிகளுக்காக ஊதியம் பெறாமல் சட்டப் பணியாற்றிய அர்ப்பணிப்பு மிக்கத் &nbsp;தோழராகவும் அவர் திகழ்ந்ததாகக் குறிப்பிட்டனர். &nbsp;இந்நிகழ்வில் மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, கே.பி.ஜானகியம்மாள் டிரஸ்ட் நிர்வாகி எஸ்.வாலண்டினா, வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் மற்றும் மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராளி நிர்மலா ராணிக்கு வீரவணக்கம் செலுத்தினர். அவரது நினைவைப் போற்றும் வகை யில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்க வும் இக்கூட்டத்தில் முன்மொழியட் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.