டாக்டர் ஜே.ஸி.குமரப்பா பள்ளி பட்டமளிப்பு விழா
13 Mar 2026, 4:52 pm<p><strong>டாக்டர் ஜே.ஸி.குமரப்பா பள்ளி பட்டமளிப்பு விழா</strong></p>
<p>தஞ்சாவூர், மார்ச் 13- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி. குமரப்பா வித்யாலயா (சி.பி.எஸ்.இ) பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர் தலைமை வகித்தார். புதுக்கோட்டை எம்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் தாளாளர் முருகப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் சுரேஷ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் விவேகா ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் மீனாள், கிண்டர் கார்டன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து, பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாக இயக்குநர் எம். நாகூர்பிச்சை, அறங்காவலர்கள், செயலாளர் நபிஷாபேகம், பொருளாளர் அஸ்வின்கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் மகிலன் நன்றி கூறினார்.</p>
