இரட்டை ஊட்டச்சத்து நெருக்கடி!
15 Jul 2026, 9:11 pm

இரட்டை ஊட்டச்சத்து நெருக்கடி!

ஒருபுறம் வறுமை, பசி, மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் வாடும் மக்கள்; மறுபுறம், மாறிய உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் பருமன் மற்றும் தொற்றா நோய்களின் பிடியில் சிக்கும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் — இதுதான் இன்றைய நவீன இந்தியாவின் முரண்பாடான உண்மை. அண்மையில் வெளியான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் தரவுகளும், உலக ஊட்டச்சத்து அறிக்கைகளும் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் கொள்கை முடிவுகளில் உள்ள மிகப்பெரிய இடைவெளியை காட்டுகின்றன.

இந்தியாவில் 30.7 சதவிகித பெண்களும், 27.3 சதவிகித ஆண்களும் தற்போது அதிக எடை அல்லது உடல் பருமனுடன் உள்ளனர். 5 வய துக்குட்பட்ட குழந்தைகளில் 29.3 சதவிகிதத்தி னர் வளர்ச்சிக் குறைபாட்டுடனும், 31.8 சதவிகி தத்தினர் எடைக்குறைவாகவும் வாழ்கின்றனர். ஒரே குடும்பத்திற்குள் சிறுவயதில் ஊட்டச்சத்து குறைபாடும், வளர வளர உடல் பருமனும் தாக்கும் ‘இரட்டை ஊட்டச்சத்து நெருக்கடி’ டித்தட்டு மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

உடல் பருமன் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் சொகுசு நோய் என்ற பிம்பம் உடைந்துபோயுள்ளது. இன்று கிராமப்புறங்க ளிலும் உழைக்கும் வர்க்கத்தினரிடையேயும் உடல் பருமன் அதிகரிக்கக் காரணம் மலிவான மாவுச்சத்தும், அரசின் கொள்கைகளுமே ஆகும். அரசின் பொது விநியோகத் திட்டம் ஏழைகளின் பசியைப் போக்க அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களை மட்டுமே பிர தானமாக வழங்குகிறது. இது ‘கலோரி’ பாது காப்பைத் தருகிறதே தவிர, உடலுக்குத் தேவை யான ‘ஊட்டச்சத்து மற்றும் புரதச்சத்து’ பாது காப்பைத் தருவதில்லை. இதன் விளைவாக, ஏழைகளின் தட்டு தானியங்களால் மட்டுமே நிறைகிறது; புரதச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் தட்டிலிருந்து காணாமல் போகின்றன.

பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தி யாவில் அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளின் சந்தை 40 மடங்கு பெருகியுள்ளது. கிராமப்புறங் களில் கூட சத்தான உள்ளூர் உணவுகளை விட, லிவான விலையில் கிடைக்கும் பாக்கெட் சிப்ஸ்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. ஏழை களால் தரமான, புரதம் நிறைந்த உணவுகளை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை; மாறாக, பசியை அடக்க மலிவான ஆரோக்கியமற்ற உண வுகளை நாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் படுகிறார்கள். கடினமான உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் கூட, ஊட்டச்சத்தில் லாத தரம் குறைந்த கார்போஹைட்ரேட்டுக ளைத் தொடர்ந்து உட்கொள்வதால், அவர்க ளின் உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் ஏற் பட்டு, உடல் பருமனுக்கும் தொற்றா நோய்களுக்கும் ஆளாகிறார்கள். அதே சமயம் ஆரோக்கியத் தையும் பேணும் விரிவான ‘தேசிய ஊட்டச்சத்துக் கொள்கை’ இப்போதைய அவசரத் தேவை.