தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘இரட்டை எஞ்சின்’ மாடலின் லட்சணம்!

yesterday
‘இரட்டை எஞ்சின்’ மாடலின் லட்சணம்!

‘இரட்டை எஞ்சின்’ மாடலின் லட்சணம்!

கல்வி என்பது ஒரு சமூகத்தின் கண்ணைத் திறக்கும் அறிவுச் சுடர்; அது ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் முதன்மை ஏணி. ஆனால், நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், நீட் மற்றும்போட்டித்தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் ஏழை மாணவர்கள் தங்களின் தங்கும் விடுதிக் கட்டணத்திற்காகவும், பயிற்சிக் கட்டணத்திற்காகவும் தங்கள் சொந்த ரத்தத்தை விற்றுப் படிக்கிறார்கள் என்றசெய்தி வருகிறது. இது நாட்டின் வளர்ச்சி என்ற போர்வையைக் கிழித்து, நம் கூட்டு மனச்சாட்சியின் முகத்தில் காறி உமிழும் கொடூரம்.

“மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சிஅமைந்தால் நாடு அசுர வளர்ச்சி அடையும்”என்று மோடி கூட்டத்தால் மேடைகள்தோறும் முழங்கப்பட்ட ‘இரட்டை எஞ்சின்’ மாடலின் நிஜக் கோரம் இன்று லக்னோவின்வீதிகளில் குருதி வடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின்எதிர்காலம் வகுப்பறைகளில்தான் உருவாக்கப்படுகிறது. ஆனால், அந்த வகுப்பறைக்கான கதவுகள் ஏழைகளுக்கு மூடி வைக்கப்பட்டு, தனியார் பயிற்சி மையங்களின் முதலாளித்துவப் பசிக்கு மாணவர்கள்இரையாக்கப்படுகிறார்கள்.

1968-ஆம் ஆண்டின் கோத்தாரி கமிஷன் முதல் 2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக்கொள்கை வரை, “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தைக் கல்விக்கு ஒதுக்கவேண்டும்” என உரக்கச் சொன்ன பின்பும், இன்றுவரை இந்தியா ஒதுக்குவது வெறும் 2.9 சதவீதம் மட்டுமே! உலகச்சராசரியான 4.5 சதவீதத்தைக் கூட எட்ட முடியாத ஒரு நாடு எவ்வாறு வளர்ச்சியை நோக்கிச் செல்லும்?

பின்னடைவு என்பது நிதி ஒதுக்கீட்டில் மட்டுமல்ல; நாட்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையிலும் நீடிக்கிறது.அறிவி

யல் மற்றும் தொழில் துறை வளர்ச்சி மிக முக்கியமானது. ஆனால், இந்தியா ஆராய்ச்சி மற்றும்வளர்ச்சித் துறைக்காகத் தனது ஜிடிபி-யில் வெறும் 0.64% மட்டுமே செலவிடுகிறது.இது உலகச் சராசரியான 2.7%-ஐ விடக்குறைவு. அமெரிக்காவிலும் தென் கொரியாவிலும் 10 லட்சம்பேருக்கு 4,500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் உள்ள நிலையில், இந்தியாவில் வெறும்260 ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

வீழ்ச்சி நிதி ஒதுக்கீட்டில் மட்டுமல்ல; சிந்தனையிலும் உள்ளது.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ(எச்) ஒவ்வொரு குடிமக்களுக்கும் ‘அறிவியல் மனப்பான்மையை’ வளர்ப்பதைக் கடமையாக்கியுள்ளது.ஆனால், அறிவியல் ஆய்வுகளுக்கும் கல்விக்கும்ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்துவிட்டு, மாட்டுக்கோமியத்தில் மருந்து தேடுவதும், பழம்பெருமைகளைப் பேசி கற்காலத்திற்குச் சமூகத்தைப் பின்னோக்கி இழுப்பதும்தான் பாஜக அரசுகளின் கொள்கையாக இருக்கிறது. பகுத்தறிவும் அறிவியல் ஆய்வுகளுமே உலக அரங்கில்ஒரு நாட்டின் பெருமையை உயர்த்தும்; மாறாக, பிற்போக்குத்தனங்களும் மூடநம்பிக்கைகளும் அல்ல.

ரத்தம் கொடுத்து அறிவு பெறும் நிலை ஒருநாட்டிற்குப் பெருமையல்ல; அது பேரவமானம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.