தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரியில் ஆட்டம் காணும் ‘டபுள் என்ஜின்’ அரசு!

21 Mar 2026, 2:42 pm
புதுச்சேரியில்  ஆட்டம் காணும் ‘டபுள் என்ஜின்’ அரசு!
<p><strong>புதுச்சேரியில் &nbsp;ஆட்டம் காணும் &lsquo;டபுள் என்ஜின்&rsquo; அரசு!</strong></p> <p>&ldquo;நிலையான ஆட்சி&rdquo; என்ற முழக்கத்தோடு கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புதுச்சேரியை முடக்கிப் போட்டுள்ள என்.டி.ஏ கூட்டணி அரசு, வரும் ஏப்ரல் 9 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பைச் சந்திக்கக் காத்திருக்கிறது. மக்களின் குமுறலும் - எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் ரங்கசாமி தலைமையி லான ஏ.ஐ.என். ஆர்.சி - பாஜக கூட் டணி, நிர்வாக ரீதியாகப் பல்வேறு முரண்பாடு களைக் கொண்டிருந்தா லும், வெளியே &ldquo;நிலையான ஆட்சி&rdquo; என வேடம் போடுகிறது. ஆனால், இந்தியா கூட்டணி இவர்களின் பொய் களை ஒவ்வொன்றாக உடைத்து வருகிறது: *ரேஷன் கடைகளைத் திறப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்த டித்தது, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு மற்றும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசிடம் மண்டியிட்டது போன்றவை ரங்கசாமி அரசுக்கு எதிரான பிரதான ஆயுதங்களாக மாறியுள்ளன. *ஒன்றிய பட்ஜெட்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவ தையும், மாநில உரிமைகள் பறிக்கப்படு வதையும் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளன. * போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு மற்றும் நில அபகரிப்பு புகார்கள் புதுச்சேரி மக்க ளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. தொகுதிப் பங்கீட்டு இழுபறி எதிர்த்தரப்பில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சில சிக்கல்கள் இருந்தாலும், புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற இலக்கில் அவை ஒன்றிணைகின்றன. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அமைச்சர் நமச்சிவாயத்தை வி.வைத்திலிங்கம் தோற் கடித்தது, எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளது. விஜய்யின் வருகையால் &nbsp;என்ன நடக்கும்? புதுச்சேரி அரசியலில் நடிகர் விஜய்யின் &lsquo;தமிழக வெற்றிக் கழகம்&rsquo; (TVK) எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இத்தேர்த லில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. புதுச்சேரியில் போட்டியிடப் போவதாக அறி வித்துள்ள அக்கட்சி, இத்தேர்தலில் யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதமாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக, &ldquo;இரட்டை என்ஜின்&rdquo; என்பது வெறும் விளம்பரமே தவிர, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அது தவறிவிட்டது என்பதே புதுச்சேரி கள நிலவரமாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.