முந்தய பக்கம்

காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!

7 Apr 2026, 5:30 am
காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!

காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram